Breaking News:நாமக்கல் திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து ஸ்டாலின் திடீர் கண்டன பேரணி
சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கறுப்புக் கொடி காட்டிய நாமக்கல் திமுகவினர் 192 பேரை சிறையில் அடைத்ததைக் கண்டித்து சென்னையில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி கண்டனப் பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியின் முடிவில் பேசிய ஸ்டாலின், மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இன்றைய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இப்பகுதியில் படிக்கலாம்:
ஆய்வுப் பணியை ஆளுநர் தொடர்ந்தால் திமுக போராட்டம் தொடரும்
விடுவிக்கப்பட்ட பின்னர் ஸ்டாலின் பேட்டி
தீவிரமான திமுகவின் போராட்டம் இரவோ நாளையோ கூட இருக்கும்- ஸ்டாலின்
சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்கள் பற்றி இந்திரா பானர்ஜி ஆதங்கம்
விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு முதல்வர் கடிதம்
உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையங்களை அமைக்க முதல்வர் கோரிக்கை
கர்நாடகா பிரதிநிதியை மத்திய அரசு நியமித்ததற்கு கண்டனம்
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்
கடல் காற்று அதிகமாக வீசும் என்பதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஆடு மாடுகளுடன் பங்கேற்பு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஆடு மாடுகளுடன் பங்கேற்பு
நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயி தீக்குளிக்க முயற்சி
மஞ்சவாடி, நடுப்பட்டியில் நிலம் எடுக்க எதிர்ப்பு
துவக்கம் முதலே திமுக ஆளுநரின் ஆய்வுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறது
ஆளுநர் தனது தவறை தொடர்ந்து செய்துகொண்டுள்ளார்- ஸ்டாலின்
திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்
ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது
10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்அளவீட்டில் குளறுபடி என புகார்
ரூ.58,000 மின்கட்டணம் குறித்து புகாரளித்தும் மின்வாரியம் விளக்கம் தரவில்லை என மக்கள் புகார்
மடப்பள்ளியில் புனரமைப்பு பணிகள் மட்டுமே நடந்தது என திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு
மடப்பள்ளியில் சுரங்கம் தோண்டியதாக முன்னாள் கோயில் அர்ச்சகர் புகாரால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் மோதி இளைஞர் பலி
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பாஜக நிர்வாகி அன்வர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை
ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்
தமிழகத்திற்கு எந்த வளர்ச்சி திட்டமும் வரக்கூடாது என்பதில் ஸ்டாலின் குறியாக உள்ளார்- தமிழிசை
மாநில ஆளுநரை அரசியல் ஆதாயத்திற்காக விமர்சிக்கிறார்கள்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
ஆனால் ஸ்டாலினால் ஆட்சியை கலைக்க முடியவில்லை - திண்டுக்கல் சீனிவாசன்
முதல்வர், துணை முதல்வருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்ததில்லை - திண்டுக்கல் சீனிவாசன்
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!