பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாப பலி - வீடியோ
கோடை விடுமுறையில் வீட்டு மொட்டை மாடியில் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த வருண்குமார் என்ற மாணவன், மின் கம்பியில் மாட்டிக்கொண்ட பட்டத்தை எடுகக்ச் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் ஜாக்ஸன்பேட்டையில் மின் கம்பியில் மாட்டிய பட்டத்தை எடுகக்ச் சென்ற பள்ளி மாணவர் மீது மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஜாக்ஸன்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வருண்குமார் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கோடைவிடுமுறை என்பதால் வீட்டு மொட்டைமாடியில் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்.

அப்போது காற்றில் அலைந்த பட்டம் மின்கம்பியில் மாட்டியுள்ளது. உடனே அருண்குமார் ஒரு கம்பியை வைத்து அந்த பட்டத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதியே சோகமயமாக உள்ளது.
வருண்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications