ஈரோடு அருகே பள்ளி மாணவிகள் நட்ட மரக்கன்றுகளை பிடுங்கியெறிவதா? சப் இன்ஸ்பெக்டர் தூக்கியடிப்பு!
பள்ளி மாணவிகள் நட்ட மரங்களை காவல் உதவி ஆய்வாளர் பிடுங்கி எறிந்துள்ளார்.
Recommended Video

ஈரோடு: ஈரோடு அருகே பள்ளி மாணவிகள் சாலையோரம் நட்ட மரங்களை அகற்றிய காவல் உதவி ஆய்வாளர் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சாணார்பாளையம் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள், பள்ளியில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை சாலையோரம் நட்டு வைத்தனர். பின்னர் மரக்கன்றுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு 4 கம்புகளையும் நட்டுவைத்து விட்டு சென்றனர்.

ஆனால் இந்த மரக்கன்றுகள் தமக்கு இடையூறாக இருப்பதாக அங்கு வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் என்பவர், இன்று காலைஅங்கு நடப்பட்டிருந்த மரக்கன்றுகள் சிலவற்றையும், பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த கம்பு வேலியினையும் பிடுங்கி வீச ஆரம்பித்தார்.
இதனால் மனம் வெம்பிய மாணவிகள் அப்பகுதி பெண்களுடன் இணைந்து, மரங்களை ஏன் இப்படி சேதப்படுத்துகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு ஜெயச்சந்திரனோ மிரட்டும் தொணியில் அவர்களுக்கு பதிலளித்து சென்றுள்ளார்.
மரக்கன்றுகளை காவல் உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் அகற்றும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது. அனைத்து தரப்பினரிடமும் இச்சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளரை ஈரோடு மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications