அன்று ரூ150 கோடி-இன்று ரூ750 கோடி மோசடி... விடாது கருப்பாய் மீண்டும் சிக்கிய சுபிக்ஷா சுப்பிரமணியன்
நிதி நிறுவன மோசடியைத் தொடர்ந்து வங்கி கடன் மோசடி வழக்கில் மீண்டும் சிக்கியிருக்கிறார் சுபிக்ஷா சுப்பிரமணியன்.
Recommended Video

சென்னை: நிதி நிறுவனம் நடத்தி ரூ150 கோடி மோசடி செய்ததற்காக 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பொருளாதார குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டவர்தான் இன்று ரூ750 கோடி வங்கி மோசடியில் அகப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியன்.
1997-ம் ஆண்டு சுபிக்ஷா பல்பொருள் வர்த்தக நிறுவனத்தை தொடங்கியவர் சுப்பிரமணியன். 2000-க்கும் மேற்பட்ட கிளைகளை நாடு முழுவதும் தொடங்கி நடத்திய சுப்பிரமணியனின் பூர்வீகம் சென்னைதான்.
சென்னை ஐஐடியில் படித்தவரான சுப்பிரமணியன், சுபிக்ஷா வருமானத்தை பல்வேறு வர்த்தகங்களில் முதலீடு செய்தார். ஆனால் இந்த வர்த்தகங்களில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

நிதி நிறுவனம்
இதனால் கடைகளுக்கு வாடகை தர முடியாத சூழல், ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலை 12 ஆண்டுகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தார் சுப்பிரமணியன். சுபிக்ஷாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து விஸ்வபிரியா எனும் நிதி நிறுவனத்தை தொடங்கினார்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சுப்பிரமணியனை நம்பி 5,000 பேர் முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு வட்டியைகூட சுப்பிரமணியன் தராமல் ஏப்பம் விட்டார். 2015-ம் ஆண்டு சுப்பிரமணியன் மீது ஏராளமான புகார்கள் போலீசில் குவிந்தன. ஆனால் சுப்பிரமணியனோ முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்துக்கு போனார். அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2015-ல் சுப்பிரமணியன் கைது
உடனே தப்பி ஓடி தலைமறைவாகப் பார்த்தார் சுப்பிரமணியன். ஆனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ரூ150 கோடி மோசடி வழக்கில் 2015-ம் ஆண்டு சுப்பிரமணியனை கைது செய்தனர்.

ரூ750 கோடி வங்கி கடன் மோசடி
அதைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று சுப்பிரமணியன் மோசடி செய்ததும் அம்பலமாகி வந்தது. இதனால் அவரது சொத்துகள் முடக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் ரூ750 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் இன்று சுபிக்ஷா சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications