Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கல்பட்டு பத்திரப்பதிவு ஆபீஸில் ரஜினிக்கு என்ன வேலை? அந்த 12 ஏக்கர் நிலமா? இதுதான் சூப்பர் ஸ்டார்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்றைய தினம் ஏன் திருப்போரூர் பத்திரப்பதிவு ஆபீசுக்குள் போனார் என்பதுதான் இந்த 2 நாட்களாகவே ஆர்வமாக எகிறி வருகிறது. எனினும் இதுகுறித்த சில தகவல்கள் கசிந்து கொண்டிருக்கிறது.

சிறுசேரி மென்பொருள் பூங்கா அருகில் நாவலூரில், ஓஎம்ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் சாலையில், ஒரு நிலத்தை வாங்கியிருக்கிறாராம் நடிகர் ரஜினிகாந்த். இந்த இடத்தை நேற்று பத்திரப்பதிவு செய்திருக்கிறார்..

Super Decision by Actor Rajinikanth and Do you know why did Rajini go to Chengalpattu Tiruporur Land Registration Office

திருப்போரூர்: இதற்காக திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்துள்ளார் ரஜினி. இங்கு ரஜினிகாந்த் வரப்போவதாக முன்கூட்டியே தகவல் வெளியானதால், சார் பதிவாளர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.. ரஜினி வரப்போகிறார் என்றதுமே, பதிவுத்துறை உயர் அதிகாரிகள், சார் - பதிவாளர் மற்றும் ஊழியர்கள், காலையில் 8 மணிக்கே ஆபீசுக்கு வந்துவிட்டார்களாம்.

ஆனால், காலை 9.45 மணிக்கு ரஜினி வந்தார்.. அவருடன் பாதுகாவலர்களும் வந்திருந்தனர்.. அவரை பதிவுத்துறை செங்கல்பட்டு மண்டல டிஐஜி ராஜ்குமார், மாவட்ட பதிவாளர் அறிவழகன், திருப்போரூர் சார்பதிவாளர் சக்தி பிரகாஷ் வரவேற்றனர்.. பதிவுத்துறை அலுவலகர்கள் ரஜினியை போட்டோ எடுத்தார்கள்.. பிறகு பயோஅமடிரிக் மூலம் கைரேகையை பதிவு செய்தனர்...

ஆவணங்கள்: ரஜினி பெயரில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. அந்த பத்திரத்தில் 12 ஏக்கர் இடம் வாங்கியிருப்பதாகவும், இதற்காக 6 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முக்கால் மணி நேரத்தில் பத்திரப்பதிவு வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. இதையடுத்து ரஜினி அங்கிருந்து கிளம்பி செல்ல வெளியேவந்தார். ஆனால், அதற்குள் ஏகப்பட்ட ரசிர்கள் அங்கு குவிந்துவிட்டனர். அவர்களை பார்த்ததுமே ரஜினி மகிழ்ச்சியுடன் கை அசைத்தார்.

போட்டா போட்டி: "தலைவா தலைவா" என்று கூட்டத்தினர் உணர்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர்.. ரஜினியுடன் செல்பி எடுக்கவும், கைகளை குலுக்கவும் போட்டா போட்டிகளும், தள்ளுமுள்ளு நடந்தன.. அவருடன் போட்டோ எடுக்க முண்டியடித்தனர்.. அங்கிருந்த பெண்மணி ஒருவருடன் மட்டும் செல்ஃபி எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த், தன்னுடைய காரில் ஏறி கையசைத்து விட்டு கிளம்பி போய்விட்டார்.

ரஜினிகாந்த்துக்கு சொந்தமான வீடு போயஸ் கார்டனில் உள்ளது.. இதைத்தவிர, நீலாங்கரையிலும், படைப்பையிலும், கேளம்பாக்கத்திலும், நிலங்கள் உள்ளன.. பண்ணை வீடுகளும் உள்ளன.. அப்படியிருக்கும்போது, இந்த நிலத்தையும் ரஜினி ஏன் வாங்கினார்? என்ற சலசலப்புகள் எழுந்தன. இறுதியில், இது தொடர்பாக சில தகவல்களும் கசிந்து வருகின்றன.

மருத்துவமனை: அதாவது, இந்த இடத்தில் ஒரு பெரிய மருத்துவமனையை கட்ட போகிறாராம் ரஜினி.. இதில் ஏழைகளுக்கு இலவசமான சிகிச்சையை தரப்போகிறாராம்.. அதேபோல, வசதி படைத்தவர்களுக்கு கட்டணம் வாங்கப்படுமாம்.. இலவசம் + கட்டணம் என்ற 2 பிரிவுகளின் கீழ் இந்த மருத்துவமனையை நடத்த இருக்கிறாராம்.

ரஜினிகாந்த் தமிழ்நாட்டுக்கு வந்து 50 வருட காலத்துக்கும் மேலாகிவிட்டது.. ஆனாலும், தமிழக மக்களால் உச்ச நிலையை அடைந்தும்கூட, தமிழக மக்களுக்கு பெரிதாக எதுவுமே செய்யவில்லையே என்ற ஒரு ஆதங்கம் அவ்வப்போது வெளிவந்தவாறே இருக்கும்.. கண்ணுக்கு தெரியாமல் ரஜினிகாந்த பல உதவிகளை செய்திருப்பதை மறுக்க முடியாது.

நிவாரணம்: கடந்த டிசம்பர் மாதம்கூட, புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திருந்தார்.. கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து லாரிகள் மூலம் மளிகை பொருட்கள், பெட்சீட் மற்றும் நிவாரண பொருட்கள், பெட்சீட் மற்றும் நிவாரண பொருட்கள் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ரஜினிகாந்த் பவுண்டேசன் மற்றும் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.. ஒவ்வொரு மூட்டையிலும் ரஜினியின் போட்டோவும் பொறிக்கப்பட்டிருந்தது. அதே போல், அன்னதானமும் போடப்பட்டது.

மகிழ்ச்சி: இதெல்லாம் அவ்வப்போது, பேரிடர் காலங்களில் பெரும்பாலானோர் செய்யக்கூடிய தற்காலிக உதவிகள் என்றாலும், மருத்துவமனையை கட்டி, அதில் ஏழைகளுக்கு சிகிச்சையும் தரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

ஆனால், இதுபோன்ற உதவிகளையெல்லாம் கேப்டன் விஜயகாந்த், என்றைக்கோ தமிழக மக்களுக்கு செய்துவிட்டார் என்றாலும், ரஜினிகாந்த இப்போதாவது இப்படியொரு முயற்சியை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.. பாராட்டத்தக்கது...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+