கடையடைப்பில் பங்கேற்காத ஸ்வீட் ஸ்டாலை அடித்து நொறுக்கிய அதிமுகவினர்: ஆரணியில் பரபரப்பு
திருவண்ணாமலை: கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடாத ஸ்வீட் ஸ்டால் அதிமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் ஆரணியில் நடந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினரின் நெருக்கடியாலும், மிரட்டலாலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கச் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களின் உத்தரவை ஏற்று அந்தந்த துறை தொடர்பான போராட்டங்களை நடத்த, அடிமட்ட நிர்வாகிகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான ஸ்வீட் ஸ்டால் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிமுகவினர் வந்து அனைவரும் கடைகளை மூடி போராட்டம் நடத்துகிறார்கள். நீங்களும் கடையை மூடுங்கள் என்று மிரட்டியுள்ளனர். ஆனால் பக்ரித் பண்டிகையையொட்டி நல்ல வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தை கடையை மூடினால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று வெங்கடேசன் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் இனிப்பு கடையை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு ஆரணி வணிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications