நத்தம் புளி, நல்லூர் வரகு, ஆயக்குடி கொய்யாவுக்கு புவிசார் குறியீடு! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: நத்தம் புளி, நல்லூர் வரகு, ஆயக்குடி கொய்யா உள்ளிட்ட 5 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே 45 பொருட்களுக்கு தமிழகத்தில் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மேலும் 5 விளை பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது நத்தம் புளி, நல்லூர் வரகு, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி கரும்பு, வேதாரண்யம் முருங்கை ஆகிய 5 பொருட்கள்தான் இவை. புவிசார் குறியீடு என்பது ஒவ்வொரு மாநிலங்கள், ஒவ்வொரு மாவட்டத்தில் தனித்தன்மை கொண்ட பொருட்களுக்கு கொடுக்கப்படுவது.
அதன்படி அந்த பொருட்கள் சர்வதேச அளவில் பிரபலமாகிறது. அந்த வகையில் 195 இந்திய பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயம், உணவு சார்ந்த பொருட்கள் 57 ஆகும்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மதுரை மல்லி, மதுரை சுங்குடி சேலை, சேலத்து மாம்பழம், தஞ்சை ஓவியங்கள், நெல்லை பத்தமடை பாய் , பண்ருட்டி பலாப்பழம், திருவண்ணாமலை ஏலக்கி வாழைப்பழம், தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், நெல்லை அல்வா, வில்லிப்புதூர் பால்கோவா, பழனி பஞ்சாமிர்தம், காரைக்குடி கண்டாங்கி சேலை, ஆத்தங்குடி பளிங்கு ஓடுகள், திண்டுக்கல் பூட்டு, ஆம்பூர் பிரியாணி, சிவகாசி பட்டாசு, கும்பகோணம் காபி, நாகை நேந்திரம் வாழை, மார்த்தாண்டம் தேன், தேனி கரும்பு, ஊத்துக்குளி வெண்ணெய், திருச்செந்தூர் கருப்பட்டி, வாணியம்பாடி பிரியாணி, பவானி ஜமக்காளம், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, திருப்பாச்சி அரிவாள், விருதுநகர் பரோட்டா, சின்னாளப்பட்டி சேலை, உடன்குடி கருப்பட்டி, மணப்பாறை முறுக்கு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு, சோழவந்தான் வெற்றிலை, அரும்பாவூர் மரசிற்பம், பொள்ளாச்சி இளநீர், சுவாமிமலை வெண்கலச் சிலை வார்ப்பு, இலவம்பாடி முள் கத்திரிகாய் உள்ளிட்டவைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

அந்த வகையில் நத்தம் புளி, நல்லூர் வரகு, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி கரும்பு, வேதாரயணம் முருங்கை ஆகிய 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தமிழகத்தில் கடைசி முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அந்த வகையில் இன்றைய தினம் வேளாண் பட்ஜெட்டை 4ஆவது முறையாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் புவிசார் குறியீடு குறித்த விவரங்களை அறிவித்திருந்தார். இந்த பட்ஜெட்டின் போது அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் பச்சை துண்டு அணிந்திருந்தனர். சில சீனியர் அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பச்சை துண்டு அணிந்திருக்கவில்லை.












Click it and Unblock the Notifications