மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், செண்டை மேளம் என மோடிக்கு மெகா வரவேற்பு கொடுத்த தமிழக அரசு!
சென்னை வந்த பிரதமர் மோடிக்கு மயிலாட்டம் ஒயிலாட்டம் செண்டை மேளம் என தமிழக அரசு உற்சாக வரவேற்பு அளித்தது.
சென்னை: மோடிக்கு மயிலாட்டம் ஒயிலாட்டம் செண்டை மேளம் என தமிழக அரசு உற்சாக வரவேற்பு அளித்தது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் இன்று அக்கட்சியினரால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பணிபுரியும் பெண்கள் வேலைக்கு செல்ல வசதியாக மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இன்று மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்காக சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

காரில் கலைவாணர் அரங்கம்
இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்தார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து கார் மூலம் கலைவாணர் அரங்கத்துக்கு புறப்பட்டார்.

அசத்தல் வரவேற்பு
இதனை முன்னிட்டு அவர் செல்லும் வழியிலும் கலைவாணர் அரங்கத்திற்கு வெளியேயும் மயிலாட்டம் ஒயிலாட்டம், செண்டை மேள முழக்கம் என தமிழக அரசு அசத்தல் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.

காண குவிந்த மக்கள்
மேலும் பிரதமர் மோடியை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் அடையாறு கடற்படை தளத்தில் இருந்து கலைவாணர் அரங்கம் வரை ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். மேலும் பிரதமர் மோடிக்கு பாஜகவினரும் அதிமுகவினரும் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications