தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஆரம்பித்து தற்போது கர்நாடகா மற்றும் கேரளாவில் தீவிரமடையத் துவங்கியுள்ளது. தமிழகத்திலும் வேலூர், கோவை போன்ற இடங்களில் பலத்த மழை கொட்டியுள்ளது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் சில இடங்களில் இன்றும் மழை பொழிய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த வானிலை நாளை வரை நீடிக்கும் என்று கருதப்படுகிறது " என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று பெய்த மழை அளவின்படி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 12 செ.மீ., வால்பாறையில் 7 செ.மீ, சேலத்தில் 4 செ.மீ, சேலம் மாவட்டம் ஏற்காடு, வாழப்பாடி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ, நீலகிரி மாவட்டம் தேவலா, காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், சென்னை மாவட்டம் டி.ஜி.பி. அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
வேலூரில் கடந்த சில 15 நாட்களுக்கு முன்பு வெப்பச்சலனம் காரணமாக ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்தது. கடந்த 9 ஆம் தேதி காலையும் மழை பெய்தது.
அதற்கு பின்பாக நேற்றுதான் மறுபடியும் மாலை 6 மணி அளவில் வேலூரில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications