தமிழகத்தில் விரைவில் உறுதியாக தேர்தல் நடைபெறும்.. ஸ்டாலின் திடீர் பேச்சு!
ஈரோட்டில் நதிகள் இணைப்பு மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின் தமிழத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.
ஈரோடு: தமிழகத்தில் விரைவில் உறுதியாக தேர்தல் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோட்டில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நதிகள் இணைப்புக்கு ஆதரவு பெருகினாலும் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. பாண்டியாறு - புன்னம்புழா உள்ளிட்ட பல்வேறு நதிகள் இணைப்பு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. குறைகளை மறைக்கவே மத்திய அரசு புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மிரட்டலுக்காக மட்டுமே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெட்கக்கேடான ஆட்சி நடைபெறுகிறது. ஒரு வாக்குப்பதிவில் 3 முதல்வர்கள் ஆட்சி நடத்தியது தமிழகத்தில் தான். தினசரி புதிய புதிய அணிகள் உருவாகிக்கொண்டே உள்ளன.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதிமுகவில் பலர் சிறை செல்வார்கள். அணி அணியாய் செயல்படுபவர்கள் ஆட்சியை கவிழ்க்க முன்வரமாட்டார்களா? என்று கூறினார். மேலும் தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடப்பது உறுதி என்றார் ஸ்டாலின்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications