தேர்தல்.. கணக்கில் வராத பணம் பறிமுதலில் தமிழகம் "சாதனை"!
சென்னை: ஐந்து மாநில சட்டசபை தேர்தல் மற்றும் ஏற்காடு சட்டசபை தேர்தலில் கணக்கில் வராத பணம் பறிமுதல் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழகம் "சாதனை" படைத்திருக்கிறது.
டெல்லி, ராஜஸ்தான், மிசோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் தமிழகத்தில் ஏற்காடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலையொட்டி 5 மாநிலங்கள் மற்றும் ஏற்காட்டில் தொடர்ந்து வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் பெருமளவு பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

5 மாநிலங்களில் ரூ16 கோடி
டெல்லி உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தொகுதிகளிலுமே மொத்தமாக கணக்கில் வராத பணம் ரூ16 கோடி கைப்பற்றப்பட்டிருக்கிறது.

ம.பி, ராஜஸ்தானில் ரூ12..69 கோடி
மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் மொத்தம் ரூ12.69 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் ரூ3.86 கோடி
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ3.86 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மிசோரம், டெல்லியில்..
தேர்தல் நடைபெறும் மிசோரம், டெல்லியில் சில லட்சங்கள்தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்காட்டில் மட்டும் ரூ 4.3 கோடி
ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு சட்டசபை தொகுதியான ஏற்காட்டில் மட்டும் ரூ1.3 கோடி கணக்கில் வராத பணமும் ரூ3 கோடி மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பங்கு 25%
ஒட்டுமொத்தமாக தேர்தல் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத பணம் மற்றும் நகைகளில் தமிழகத்தின் ஏற்காடு தொகுதி மட்டுமே 25% பங்கு வகித்து சாதனை படைத்திருக்கிறது.

2011-ல் ரூ36.54
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அகில இந்திய சாதனையாக தமிழகத்தில் கணக்கில் வராத ரூ36.54 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications