கமல் மனக்கோட்டை கட்டுகிறாராம்.. சொல்கிறார் தமிழிசை
கோட்டையை பிடிக்க மனக்கோட்டை கட்டுகிறார் கமல் என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் கோட்டையை நோக்கி மனக்கோட்டை கட்டுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
நடிகர் கமல் ஹாசன் கடந்த சில தினங்களாக ஆட்சியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் ரியாக்ட் செய்வதை போல் பாஜக தலைவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் முதுகெலும்பில்லாதவர் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சித்திருந்தார். இந்த காரசார விவாதங்கள் அவ்வப்போது தலைதூக்கி வருகிறது.

திருடர்கள்
இந்நிலையில் கோவையில் திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் கூறுகையில் ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு திருடர்களை அனுமதித்துவிட்டோம். இந்த அரசியலை இப்படியே விட்டுவிடக் கூடாது.

கோட்டை நோக்கி புறப்படுவோம்
தேவைப்பட்டால் கோட்டை நோக்கி புறப்படுவோம். அரசியலை ட்விட்டரில் தொடங்கினால் என்ன? கோவையில் தொடங்கினால் என்ன? தொழிலாளியுடன் கோரிக்கைகாக செல்வதைப் போன்றதுதான் கோட்டை நோக்கிய பயணம்என்று பேசியிருந்தார்.
|
தமிழிசை கோபம்
இதற்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அதில் கோட்டையை நோக்கி கட்டும் மனக்கோட்டையை டுவிட்டரில் கட்டினால் என்ன? கோவையில் கட்டினால் என்ன?

சினிமாவைக் கோட்டை விட்ட பின்
சினிமாவைக் கோட்டை விட்டபின் வேறு என்ன கோட்டை நோக்கிதான் வரவேண்டும் என்று டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications