For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.. அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரை

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 2 மணி நேரமாக கூட்டம் நடந்தது.

இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Newest First Oldest First
6:31 PM, 9 Sep

7 தமிழர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை முடிவு- பாரதிராஜா வரவேற்பு
6:17 PM, 9 Sep

ஆளுநர் கருணை காட்ட வேண்டும்- நளினி தாயார் பத்மாவதி

தமிழக அரசுக்கு பத்மாவதி நன்றி

6:08 PM, 9 Sep

மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டுத்தான் 7 பேரையும் விடுவிக்க முடிவு - ஜெயக்குமார்

உச்சநீதிமன்றம்தான் முக்கியமானது, அதற்கு மேலானவர்கள் யாருமில்லை - ஜெயக்குமார்

6:08 PM, 9 Sep

161வது பிரிவு தெளிவாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்றாக வேண்டும் - ஜெயக்குமார்

இதில் எந்தக் குழப்பமும் இல்லை, தெளிவாக உள்ளது - ஜெயக்குமார்

இன்றே தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் - ஜெயக்குமார்

ஒட்டுமொத்த தமிழரின் எண்ணம் 7 தமிழரையும் விடுவிக்க வேண்டும் என்பது - ஜெயக்குமார்

ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம்தான் இது - ஜெயக்குமார்

அன்று நிறைவேறாமல் போய் விட்டது.. இன்று நிறைவேறும் - ஜெயக்குமார்

6:03 PM, 9 Sep

அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டுததான் ஆக வேண்டும்- ஜெயக்குமார்
6:03 PM, 9 Sep

ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா விருது வழங்க கோரியும் தமிழக அமைச்சரவையில் தீர்மானம்
6:00 PM, 9 Sep

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்டிரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட பரிந்துரை - ஜெயக்குமார்
5:59 PM, 9 Sep

அண்ணாவுக்கு பாரதரத்னா விருது அளிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை - ஜெயக்குமார்
5:59 PM, 9 Sep

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் என்ன முடிவு?- ஜெயக்குமார்

முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் பற்றி ஆலோசனை

உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் கருணை மனுவை 161வது சட்ட பிரிவின்கீழ் பரிசீலிக்கலாம் என உத்தரவு-ஜெயக்குமார்

மற்ற 6 பேரையும் சேர்த்து 7 நபர்களையும் முன் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முடிவு-ஜெயக்குமார்

5:57 PM, 9 Sep

முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம் நிறைவு

2 மணி நேரம் நடந்த கூட்டம் நிறைவு

5:56 PM, 9 Sep

தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு
5:51 PM, 9 Sep

தமிழக அமைச்சரவை கூட்டம்: சில நிமிடத்தில் முக்கிய அறிவிப்பு

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

5:36 PM, 9 Sep

7 தமிழர்கள் விடுதலை.. முதல்வர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சரவை ஆலோசனை

7 தமிழர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

குட்கா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடப்பதாக தகவல்

4:08 PM, 9 Sep

7 பேர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு

விதி எண் 161ன் படி தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு

4:06 PM, 9 Sep

முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது
4:04 PM, 9 Sep

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆலோசனை

3:37 PM, 9 Sep

இன்னும் சற்று நேரத்தில் கூடுகிறது தமிழக அமைச்சரவை

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைைச் செயலகம் வந்தார்

7 தமிழர் விடுதலை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுமா என்று தமிழர்கள் எதிர்பார்ப்பு

English summary
Here are the updates of TN cabinet meeting which are going to convene today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X