Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுவிலக்கு போராட்டங்கள் மாய தோற்றம்தானா? மக்கள் கொந்தளிக்கவில்லையா? பகீர் களநிலவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போலவும், சில ஊடகங்களில் கூறப்படுவதை போலவும் தமிழகத்தில் மது விலக்குக்கு எதிரான மனோபாவம் இல்லை என்பது போல களநிலவரங்கள் கூறுகின்றன.

மது விலக்குக்கு எதிரான போராளி சசிபெருமாள் மரணமடைந்ததை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மது விலக்கு போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார். கலிங்கப்பட்டியில் வைகோ நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதையடுத்து சென்னையில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியதும், அவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்ததும், உச்சகட்ட கியரில் மதுவிலக்கு பிரச்சினை பயணிக்க தொடங்கியது.

தலைவர்கள் கருத்து

தலைவர்கள் கருத்து

கல்லூரி மாணவர்கள் தெருவிற்கு இறங்கி போராட வேண்டும் என்று வைகோ அழைப்புவிடுத்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு பற்றி பரிசீலிக்கப்படும் என்று அக்கட்சி தலைவர் கருணாநிதி அறிவித்தார். மது விலக்குக்கு ஆதரவாக கோயம்பேடு முதல் கோட்டைவரை மனித சங்கிலி போராட்டம் நடத்த முற்பட்டு கைதானார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

மீடியாக்களும்

மீடியாக்களும்

சில மீடியாக்களில், அதிலும் குறிப்பாக திமுக ஆதரவு காட்சி ஊடகங்களில் மதுவிலக்கு பிரச்சினைக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டன. அச்சு ஊடகங்களில் அதிக பக்கங்கள் அதற்காக ஒதுக்கப்பட்டு, கொட்டை எழுத்துக்களில் மதுவிலக்கு பிரச்சினைக்காக தமிழகமே கொந்தளிப்பது போல காண்பித்தன.

அரசு அசையவில்லை

அரசு அசையவில்லை

ஆனால், முதல்வர் ஜெயலலிதா தரப்பில் இருந்தோ, அமைச்சர்கள் தரப்பில் இருந்தோ அதை ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ளாதது போன்ற தோற்றமே இருந்தது. அரசு அசைந்தே கொடுக்கவில்லையே ஏன் என்ற சந்தேகம் எதிர்க்கட்சியினருக்கும், பல பொதுமக்களுக்குமே இருந்துவருகிறது.

இப்போது, அப்போது

இப்போது, அப்போது

சுதந்திர தின உரையில் மது விலக்கை ஜெயலலிதா அறிவிப்பார், சட்டசபை கூட்டத்தில் அறிவிப்பார் என்றெல்லாம் சில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும், செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், அரசு எதற்கும் அசையவேயில்லை. இதன்பின்னணியில் அரசுக்கு உளவுத்துறை கொடுத்த ஒரு முக்கிய அறிக்கைதான் காரணம் என்று கூறப்படுகிறது.

உளவுத்துறை பகீர்

உளவுத்துறை பகீர்

சில ஊடகங்களிலும், எதிர்க்கட்சிகளும் கூறுவதைபோல கள நிலவரம் கிடையாது. மது விலக்குக்கு ஆதரவாக பொதுமக்களிடம் பொதுக்கருத்து உருவாகவில்லை. அதை பெரிய விஷயமாக பெரும்பான்மை மக்கள் நினைக்கவில்லை என்று உளவுத்துறை உறுதியாக ஒரு அறிக்கையை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏன் கொந்தளிப்பு இல்லை?

ஏன் கொந்தளிப்பு இல்லை?

மது விலக்குக்கு ஆதரவாக மக்களிடம் பொதுக்கருத்து உருவாகாததற்கு, காரணங்கள்:

*டாஸ்மாக்கை அகற்றினால் கள்ளச்சாராய கடைகள் உருவாகிவிடும் என்ற அச்சம்.
*பெரும்பான்மையான ஆண்கள் மது பழக்கம் உள்ளவர்கள் என்பதால், குறைந்த விலையிலும், கள்ளச்சாராயத்திற்கு அஞ்சாமலும் மது அருந்த டாஸ்மாக் உதவுவதாக கருதுகிறார்கள்.
*டாஸ்மாக்கை அகற்றினால் மதுவிற்கு எங்கு செல்வது என்ற பதற்றம்.

சிறு மாற்றங்கள் வரலாம்

சிறு மாற்றங்கள் வரலாம்

மேற்கண்ட காரணங்களால் டாஸ்மாக்கை அகற்ற பெரும்பான்மையினர் விரும்பவில்லை என்றும், அதேநேரம், டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கையை குறைக்க அவர்கள் விரும்புவதாகவும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாம். எனவே, மதுபான கடைகள் நேரத்தை குறைப்பது, எண்ணிக்கையை குறைப்பது போன்ற அறிவிப்புகள்தான் சில காலங்களில் வரலாம் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவின் நிலைப்பாடு

ஜெயலலிதாவின் நிலைப்பாடு

இலங்கை தமிழர் பிரச்சினை, ராஜிவ்காந்தி கொலையாளிகளான தமிழர்கள் பிரச்சினை, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை போன்றவற்றில் காட்டிய ஜெயலலிதா காண்பித்த உறுதியை, டாஸ்மாக் அகற்று பிரச்சினையில் காட்டவில்லை என்பதற்கு அந்த பிரச்சினைகளில் மக்களிடமிருந்த ஒருமித்த உணர்வுப்பூர்வமான கருத்தும், இப்பிரச்சினையில் அது இல்லாததும் காரணமாக கூறப்படுகிறது.

லயோலா பேராசிரியர்

லயோலா பேராசிரியர்

இந்நிலையில், லயோலா கல்லூரியின் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட அரசியல் சார்ந்த கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. இக்குழுவின் தலைவர் பேராசிரியர் ராஜநாயகத்திடம் பத்திரிகையாளர் ஒருவர் "நீங்கள் ஆய்வு நடத்திய கால கட்டத்தில் மதுவிலக்கு போராட்டம் தீவிரமாக இருந்ததே. நீங்கள் ஏன் அதை ஒரு ஆய்வு கருப்பொருளாக எடுக்கவில்லை" என்று கேட்டபோது, "மீடியாக்களும், எதிர்க்கட்சிகளும் உருவாக்கிய பிம்பத்துக்கும் களத்திலுள்ள நிலவரத்துக்கும் தொடர்பில்லை. மதுவிலக்கு குறித்த பிரச்சினை தமிழகத்தில் தீவிரமாக இல்லை" என்று ராஜநாயகம் பதிலளித்தார்.

நீயா, நானாவிலும் கூட

நீயா, நானாவிலும் கூட

உளவுத்துறையும், களத்தில் ஆய்வு செய்த ஒரு பேராசிரியர் குழுவும் ஒரே கருத்தைத்தான் சொல்கின்றன. மதுவிலக்கு என்பது பெரிய பிரச்சினையாக இல்லை என்பதுதான் அந்த கருத்து. அவ்வளவு ஏன்.. விஜய் டிவியின் நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியே உள்ளங்கை நெல்லிக்கனிபோல கள நிலவரத்தை காட்டிவிட்டது. அதில், கிராமத்து பெண்களும், நகர பெண்களும் பங்கேற்றனர். அதில் பெரும்பான்மையான நகர பெண்கள் தங்கள் தந்தையோ, வீட்டு ஆண்களோ குடிப்பதை பெரிதாக எடுப்பதில்லை. வருங்கால கணவர் குடித்தாலும் தடுக்கப்போவதில்லை என்று கூறினர். இதுதான் தமிழக மக்களின் கண்ணோட்டம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+