கர்நாடகாவில் மட்டுமல்ல.. தமிழக போலீசாரிடமும் அடி வாங்கும் அப்பாவி தமிழக லாரி டிரைவர்கள்- வீடியோ
ஒசூர்: பிற மாநில லாரிகள் கர்நாடக எல்லைக்குள் அனுமதிக்கப்படும் நிலையில், தமிழக லாரிகள் ஒசூர், ஜூஜுவாடி எல்லையில் 14 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக போலீசாரே, கர்நாடக எல்லைக்குள் அந்த லாரிகளை அனுமதிக்க மறுக்கிறார்கள். அதேநேரம், கர்நாடக லாரிகள் தமிழகத்திற்குள் பிரச்சினையின்றி வருகின்றன.
குடும்பங்களை விட்டு வந்து எல்லையில் தங்கி இருக்கும் லாரி டிரைவர் ஆத்திரமடைந்து நேற்றிரவு போராட்டம் நடத்தியபோது, போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். கர்நாடகாவுக்குள் சென்றால் கன்னட அமைப்பினர் அடிக்கிறார்கள் என பாதுகாப்புக்காக எல்லையில் தங்கிய லாரி டிரைவர்கள், இங்கோ தமிழக போலீசாரின் தடியடிக்கு ஆளாகியுள்ளனர்.
லாரிகளை அங்கேயேவிட்டுவிட்டு வீடு திரும்பலாம் என்றாலும், லாரி உரிமையாளர்கள் அதற்கு அனுமதிப்பதில்லையாம். எனவே பரிதாபகர நிலையில் லாரி டிரைவர்கள் உள்ளனர்.
வீடியோ












Click it and Unblock the Notifications