For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேற்று போல இருக்காது.. இன்று சென்னை, கடலோர மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வெதர்மேன்

இன்றைக்கு பகலிலும் கூட பலத்த மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நேற்றுபோல் இன்று இருக்காது. இன்றைக்கு பகலிலும் நல்ல மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மழை நிலவரத்தை கணித்து தனது முகநூலில் பதிவிட்டு வருகிறார் பிரதீப் ஜான். இன்றைய மழை நிலவரம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

TamilNadu Weatherman rain forecast

அவரது பதிவில், சென்னை மற்றும் கடலோர டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கிவிட்டது. மேகங்கள் மெதுவாக உள்நோக்கி நகர்ந்து வருகின்றன. லேசான மழையாகத் தொடங்கி சில இடங்களில் மிதமான அளவு மழை பெய்யும். ஒருசில வேளைகளில் மட்டும் சற்று கனமழையாக பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், காரைக்கால், சிதம்பரம், புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, சென்னையின் பிற பகுதிகளில் இன்று மிதமான அளவு மழை இருக்கும். நிறைய அடுக்கடுக்காக மழை மேகங்கள் தொடர்ந்து கரையில் இருப்பதைக் காணமுடிகிறது. எனவே, நேற்றுபோல் இன்று இருக்காது. இன்றைக்கு பகலிலும் நல்ல மழை இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதே மழை ஆரம்பமாகிவிட்டது என்றும் சென்னை, புறநகரில் மழை தீவிரமாக இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

English summary
TamilNadu wetherman post his FB page, Get ready for action chennai and suburban areas as squall line moves into​ the city.Chennai - Delta Coast, the clouds slowly moving into land, it may be light rains to start with and as the clouds move into land, some areas will get moderate rains with ocassional heavy spells with breaks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X