ஒரே அடி... ராஜபக்சேவை மொத்தமாக காலி செய்த தமிழர்கள் - முஸ்லீம்கள்... அவ்வளவு கோபம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகத் தமிழர்களுக்கு ராஜபக்சேவின் தோல்வி என்பது மகிழ்ச்சி தரும் செய்திதா என்றாலும் மைத்ரிபாலவின் வெற்றியைக் கொண்டாட முடியாத மன நிலையில்தான் உள்ளனர். காரணம் ஒரு ரூபாய் நாணயத்தின் ஒருபக்கம் ராஜபக்சே என்றால் மறுபக்கம் மைத்ரி என்பதால். அதேசமயம், உள்ளூரில், அதாவது இலங்கையில், ராஜபக்சேவுக்கு மரண அடி கொடுத்த சந்தோஷத்தில் திளைத்துள்ளனர் இரு இனக் குழுக்கள். அவர்கள் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள்.

இரு இனத்தவருக்கும் ராஜபக்சேவை பழி தீர்க்க பல காரணங்கள் உள்ளன. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கேப்பே விடாமல் வாக்குச் சீட்டில் முத்திரையைக் குத்தி மூத்திரச் சந்தில் கொண்டு போய் போட்டு விட்டனர் ராஜபக்சேவை.

தமிழர்களுக்கு ராஜபக்சே மீது என்ன கோபம் என்ற கேள்விக்கே அவசியம் இல்லை. உலகம் அறிந்த காரணம் அது. அதேசமயம், முஸ்லீம்களுக்கு ராஜபக்சே செய்ததுதான் அவர்களை கடுமையான கோபம் கொள்ள வைத்து விட்டது.

முஸ்லீம்கள் மீது புத்த

முஸ்லீம்கள் மீது புத்த "மாங்"குகளின் வன்முறை

சிங்கள இனவெறி பிடித்த புத்த துறவிகள் முஸ்லீம்கள் மீது அடுத்தடுத்து நடத்திய தாக்குதல் கிழக்கு மாகாணத்தில் வசித்து வரும் முஸ்லீம் சமுதாயத்தினரை வெகுவாக கோபம் கொள்ள வைத்தது.

வெறி பிடித்த கலகொடா அத்தே ஞானசேரா

வெறி பிடித்த கலகொடா அத்தே ஞானசேரா

குறிப்பாக பொது பல சேனா அமைப்பின் தலைவரான கலகொடா அத்தே ஞானசேரா என்ற புத்த துறவியின் தலைமையில் சிங்களர்கள் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் நடத்திய வெறித்தனமான வன்முறைத் தாக்குதல் சம்பவம்தான் முஸ்லீம்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்த முக்கிய சம்பவமாகும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்தியில் இது நடந்தது.

3 பேர் பலி

3 பேர் பலி

பெருவலா, அலுத்தகமா ஆகிய இரு நகரங்களிலும் முஸ்லீம்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள இனவெறியர்கள் புத்த மத துறவிகளுடன் இணைந்து நடத்திய வெறித் தாக்குதலில் 3 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல முஸ்லீம்களின் வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன.

முஸ்லீம்களை வேரறுப்போம் என வெறி முழக்கம்

முஸ்லீம்களை வேரறுப்போம் என வெறி முழக்கம்

முஸ்லீ்ம்களை ஒட்டுமொத்தமாக அழிப்போம், சிங்களத்தைக் காப்போம் என்று வெறித்தனமாக முழக்கமிட்ட பொது பல சேனாவைக் கட்டுப்படுத்த ராஜபக்சே அரசு தவறியதை முஸ்லீம்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள நினைக்கவில்லை. மாறாக காத்திருந்தனர்.. ராஜபக்சேவை கருவறுக்க.

2013ல் மசூதி மீது தாக்குதல்

2013ல் மசூதி மீது தாக்குதல்

இதேபோல 2013ம் ஆண்டில் இதே பொது பல சேனா அமைப்பினர் கொழும்பு புறநகரில் ஒரு மசூதி மீது தாக்கதுல் நடத்தி அதை சேதப்படுத்தினர். அதில் 4 முஸ்லீம்கள் காயமடைந்தனர்.

முஸ்லீம்களைக் குறி வைத்து

முஸ்லீம்களைக் குறி வைத்து

முஸ்லீம்களைக் குறி வைத்தே பொது பல சேனா பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக முஸ்லீம் பெண்கள் பர்தா போடுவதை கடுமையாக கிண்டல் செய்வதையும், அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

முஸ்லீ்ம் கட்சிகள் விலக முக்கியக் காரணம்

முஸ்லீ்ம் கட்சிகள் விலக முக்கியக் காரணம்

இந்த வன்முறை வெறியாட்டங்கள் ராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லீம் சமுதாயத்தினரை முழுமையாக திருப்பி விட்டு விட்டது. இதனால்தான் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்த முஸ்லீம் கட்சிகள், குறிப்பாக இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் அவரிடமிருந்து விலகி விட்டன.

மொத்தமாக மரண அடி

மொத்தமாக மரண அடி

ஏற்கனவே ராஜபக்சேவைக் காலி செய்ய காத்திருந்த தமிழர்களும், சிங்கள இனக்குழுக்களின் வெறியாட்டத்தால் கோபமடைந்திருந்த முஸ்லீம்களும் இணைந்து இந்த முறை வாக்களித்து ராஜபக்சேவை விரட்டியடித்துள்ளனர். இதுவே மைத்ரிபால சிறிசேன மிகப் பெரிய வெற்றியைப் பெற காரணமாக அமைந்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+