பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கத் திட்டமிட்டதாக தவாகவினர் 27 பேர் கைது
பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கத் திட்டமிட்டதாக தவாகவினர் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் : பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கத் திட்டமிட்டதாக கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நெய்வேலி என்.எல்.சி வளாகத்தில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசுக்கு எதிராகப் பேசிய வழக்கில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது கைது எதிர்த்தும், உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூரில் நடந்த போராட்டத்தில் ஏராளமான மதுக்கடைகள் சூறையாடப்பட்டன.
இந்நிலையில், கடலூரில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கத் திட்டமிட்டதாக தவாக கட்சித் தொண்டர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications