ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் துப்பாக்கிமுனையில் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்!

தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து சென்றுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்றிரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 10 மீனவர்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Ten TN fishermen arrested by Sri Lankan Navy

மேலும், அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மீனவர்கள் கைது சம்பவம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து அச்சுறுத்தி வருகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+