ஓசூர் கலரே மாறுது.. ரூ.400 கோடியில் டைடல் பார்க்.. திட்ட அறிக்கை, ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள டைடல் பார்க் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை, வரைபடம் தயார் செய்யும் பணி மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கான ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உயர்தர அலுவலக வசதிகளை கொண்ட வகையில் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓசூரில் டைடல் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்படும் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை மற்றும் டைடல் பூங்காவிற்கான மூன்று மாதிரி வரைபடங்களை சமர்ப்பிக்கும். இதிலிருந்து ஒரு மாதிரியை தமிழ்நாடு அரசு இறுதி செய்யும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 5 லட்சம் சதுர அடியில் டைடல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே, ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அருகிலுள்ள பெங்களூருக்கு இணையான வளர்ச்சியை ஓசூரில் உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன் டைடல் உயர் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓசூரில் உருவாக உள்ள டைடல் உயர் தொழில்நுட்ப பூங்கா மாநிலத்தின் மற்ற பகுதிகளில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரிவுப்படுத்தும் முக்கிய முயற்சியாகவே கருதப்படுகிறது. மேலும், இந்த டைடல் பூங்காவின் மூலம் புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கான உகந்த சூழலை உருவாக்க முடியும் என்பதோடு பல சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் மையமாகவும், ஓசூர் மாறுவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் தமிழ்நாட்டின் வடமேற்கு மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களது சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் வாய்ப்பை உருவாக்க முடியும். இப்பகுதிகளில் வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர்கள் அவர்களது சொந்த ஊர்களிலேயே வேலைவாய்ப்புகளை பெற முடியும்.
தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளில் தொழில் துறையில் மெகா முதலீட்டை சென்னையை தாண்டி பிற மாவட்டங்களுக்கும் கொண்டு வர கவனம் செலுத்தி வருவதாகவும், இது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான அடிப்படையாக விளங்கும் என தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள டைடல் பார்க் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை, வரைபடம் தயார் செய்யும் பணி மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கான ஆலோசர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை மற்றும் டைடல் பூங்காவிற்கான மூன்று மாதிரி வரைபடங்களை சமர்ப்பிக்கும். இதிலிருந்து ஒரு மாதிரியை தமிழ்நாடு அரசு இறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications