ஓகி புயலில் மாயமான மீனவர்களை மீட்க கோரிக்கை - ராஜ்நாத் சிங்கிடம் தம்பித்துரை வலியுறுத்தல்
ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களைத் தேடும் பணியைத் தொடர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் லோக்சபா துணைத் தலைவர் தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சிலர் காணாமல் போயிருக்கிறார்கள், சிலர் ஆங்காங்கே கரை ஒதுங்கி இருக்கின்றனர். மீனவர்களை மீட்கும் பணியை தொடர வேண்டும் என்று லோக்சபா துணைத் தலைவர் தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் வங்கக் கடலில் உருவான ஓகி புயல் குமரி, நெல்லை மாவட்டங்களை சூறையாடி விட்டது. புயல் பாதிப்பு பற்றி அறியாமல் ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் திசைக்கொருவராக சிதறிப் போயினர்.
குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராம மக்கள் கண்ணீருடன் கதறி வருகின்றனர். கிருஸ்துமஸ் பண்டிகைக்கு கரை திரும்புவோம் என்று கூறிச்சென்ற தந்தையும், கணவரும், மகனும் கடலுக்குள் மாயமாகிவிட்டனர். கடலுக்கு மீனவர்களில் சிலர் காணாமல் போயிருக்கிறார்கள், சிலர் ஆங்காங்கே கரை ஒதுங்கி இருக்கின்றனர்.

மத்திய அரசிடம் வலியுறுத்தல்
குமரி மாவட்ட மீனவ கிராம மக்களின் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை நேற்று லோக்சபா சபாநாயகர் தம்பித்துரை வலியுறுத்தினார்.

தமிழக அரசு காக்கும்
செய்தியாளர்களிடம் பேசிய அவர் மீனவர்களை தேடும் பணிக்கு மத்திய அரசு உதவி மிகவும் தேவை என்றும், மத்திய அரசுடன் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருவதாகவும் தம்பித்துரை தெரிவித்தார். மீனவர்களை மீட்கும் பணி நிறுத்தப்படவில்லை என்றும், மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

கடைசி மீனவர்வரை கண்டுபிடிப்போம்
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்த தம்பித்துரை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைகளை அவரிடம் மனுவாக அளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடைசி மீனவர் கண்டுபிடிக்கப்படும் வரை கடற்படையினரின் தேடுதல் தொடரும் என்று மத்திய அரசு உறுதியளித்திருப்பதாக தெரிவித்தார்.

தேசிய பேரிடராக அறிவிக்க கோரிக்கை
வெளிநாடுகளில் மீனவர்கள் கரை ஒதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார். ஒகி புயல் பாதிப்புக்கு மத்திய அரசு தமிழகத்திற்கு உதவ வேண்டும் என்று கோரி இருப்பதாகவும், தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் தம்பிதுரை கூறியுள்ளார். மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு வர இருப்பதாகவும் தம்பிதுரை தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications