சென்னையில் கன மழை.. பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட கோலாலம்பூர், பாங்காக் விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கன மழை காரணமாக சென்னை வரும் இரு விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
சென்னையில் நேற்றிரவு, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இன்று காலையும் நகரம் முழுவதும் ஆங்காங்கே சாரலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னைக்கு வரவிருந்த இரண்டு விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. சென்னை வரும் கோலாலம்பூர் மற்றும் பாங்காக் விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

சென்னையில் பெய்துவரும் கன மழை, வட கிழக்கு பருவமழையின் நல்ல முன்னோட்டமாக தென்படுகிறது. இதனால் சம்பா விவசாயிகளும், ஏனைய விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சம்பா சாகுபடிக்காக வரும் 20ம் தேதி மதுல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications