வருமான வரித்துறை மீண்டும் சம்மன்.. இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் விஜயபாஸ்கர்!
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இன்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்கே நகரில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், மாஜி எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.

அதில் விஜயபாஸ்கர் அலுவலகம், வீடு, எம்.எல்.ஏ விடுதி, சொந்த ஊரில் உள்ள வீடு, கல்குவாரி அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், கீதாலட்சுமி வீட்டில் 27 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
வருமானவரி சோதனையின்போது, விஜயபாஸ்கரின் வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் மீது வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை. விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
இதனிடையே புதுக்கோட்டையில் அவரது தந்தை சின்னத்தம்பி மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 மடங்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது.
கல்குவாரியில் சிக்கிய ஆவணங்கள் குறித்து விஜயபாஸ்கர் தந்தையிடம் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த 14ம் தேதியன்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில், விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் இன்று காலை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோதனையின் போது கைப்பற்றபட்ட ஆவணங்கள் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications