Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரக்க மனைவியும்.. கொடூர மகனும்.. ஈரோட்டில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

மதம் மாற மறுத்த கணவனுக்கு சூடு போட்ட மனைவி, மகன் கைது செய்யப்பட்டனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சொத்து வேணும்..மதம் மாறணும்..கணவனை துன்புறுத்திய மனைவி- வீடியோ

    ஈரோடு: அரக்க மனைவியும்... கொடூர மகனும்... இவர்களை பற்றிய பதற வைக்கக்கூடிய பயங்கரமான செய்திதான் இது! நம்ம தமிழ்நாட்டில் நடந்ததுதான் எல்லாத்தையும்விட ஆத்திரம்!

    சென்னிமலையை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு ஸ்ரீநாத் என்ற 24 வயதில் ஒரு மகன் உள்ளார். நாராயணசாமி நெசவுத் தொழிலை செய்து வருபவர். ஆனாலும் நாராயணசாமி பெயரில் 2 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளது.

     ஓயாமல் தொந்தரவு

    ஓயாமல் தொந்தரவு

    இந்த நிலையில் கடந்த 15 வருஷங்களுக்கு முன்னாடி, லலிதாவும், ஸ்ரீநாத்தும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டனர். தீவிரமாக இந்த மதத்தில் ஈடுபட்டதால் அடிக்கடி சர்ச், ஜெபம் என்று சென்று வருவார்கள். நாராயணசாமியும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என்று லலிதாவும் ஸ்ரீநாத்தும் தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர். ஆனால் நாராயணசாமியோ தமக்கு மதம் மாத விருப்பம் இல்லை என்றும், மனைவியும், மகனும் மாறியது அவர்களின் சுயவிருப்பம் என்றும் சொல்லி அதற்கு மதிப்பளித்து விட்டுவிட்டார்.

     சர்ச்சுக்கு வா...

    சர்ச்சுக்கு வா...

    லலிதா விடவில்லையே! தினந்தோறும் "சர்ச்சுக்கு வா... சர்ச்சுக்கு வா" என்று நாராயணசாமியிடம் நச்சரித்து கொண்டே இருந்தார். அவர் வரமாட்டேன் என்று சொன்னதும், அன்னைக்கு பூரா சண்டைதான்! நாள்தோறும் பிரச்சனை ஏற்பட ஏற்பட, நாராயணசாமிக்கு வாழ்க்கையிலும், குடும்பத்திலும் ரொம்ப வெறுப்பு வந்துவிட்டது. ஆள் பார்க்கவே மிகவும் சோர்வாகி கொண்டே வந்தார்.

     லலிதாவின் பேயாட்டம்

    லலிதாவின் பேயாட்டம்

    இப்படி ஓயாமல் பிச்சி பிடுங்கும் மனைவி மீது இருந்த கோபத்தில் ஒருநாள், தன்னிடமிருக்கும் 2 கோடி சொத்துக்களையும் தன்னுடன் பிறந்த தங்கை சரஸ்வதிக்கு எழுதி வைத்துவிடப் போவதாக எப்போதோ கூறியிருக்கிறார். அவ்வளவுதான் லலிதா... அன்றிலிருந்து பேயாட்டம் தொடங்கியது. தினமும் லலிதாவிடம் சிக்கி சின்னாபின்னமானார் நாராயணசாமி.

     வழுக்கி விழுந்திட்டேன்

    வழுக்கி விழுந்திட்டேன்

    ஏற்கனவே உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட நாராயணசாமிக்கு இப்போது புத்தியும் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. ஆனால் உடம்பில் காயங்களும் அடிக்கடி ஏற்பட்டுள்ளது. நாராயணசாமி தங்கை சரஸ்வதி, வீட்டிற்கு வரும்போதெல்லலாம் காயங்களை பார்த்து கேட்டிருக்கிறார், ஏன் உன் உடம்பில் அடிக்கடி ஏதாவது காயங்கள் இருந்துட்டே இருக்கு?" என்று கேட்டுள்ளார். அதற்கு நாராயணசாமி, "இல்லேம்மா... பாத்ரூமில் வழுக்கி விழுந்திட்டேன்" என்ற ஒரே பதிலையே திரும்ப திரும்ப சொல்லி வந்திருக்கிறார்.

     பழுக்க காய்ச்சி..

    பழுக்க காய்ச்சி..

    மதமும் மாறவில்லை, தனக்கு சொத்தையும் தரவில்லை என்ற ஆத்திரமும் ஆவேசமும் லலிதாவை கண்டமேனிக்கு யோசிக்க வைத்தது. அதன் விளைவு... கடந்த 10- நாட்களுக்கு முன்பு நாராயணசாமியை, லலிதாவும், மகன் ஸ்ரீநாத்தும், வீட்டின் அறையில் உள்ளே தள்ளி கதவை பூட்டினார்கள். பின்னர், இரும்பு கம்பியை பழுக்க காய்ச்சி நாராயணசாமி உடம்பு முழுவதும் சூடு போட்டு போட்டனர். மேலும் தடிமனான கட்டைகள் கொண்டு கட்டிய கடுமையாக தாக்கினர். பழுத்த கம்பியால் காய்ச்சி சூடு வைக்கும்போதெல்லாம் நாராயணசாமியின் அலறல் சத்தம் அந்த தெரு முழுக்க கேட்டிருக்கிறது.

     கடைசி அலறல்

    கடைசி அலறல்

    கடைசியில் வீறிட்ட ஒரு அலறல்தான் அக்கம்பக்கத்திலிருந்தவர்களை ஒன்று திரண்டு வர வைத்தது. அந்த தெருவில் உள்ளவர்கள் அனைவருமே நாராயணசாமி அழுகை சத்தத்துக்கு வந்துவிட்டனர். வந்து பார்த்தபின்புதான் தெரிகிறது, நாராயணசாமி உயிரை கையில் பிடித்து கொண்டு இருப்பது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக சரஸ்வதிக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த சரஸ்வதி, குற்றுயிரும் - குலையுயிருமாக கிடந்த நாராயணசாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

     கிட்னி பாதிப்பு

    கிட்னி பாதிப்பு

    இதுகுறித்து உடனடியாக போலீசிலும் தகவல் அளிக்கப்பட்டதை லலிதாவும் ஸ்ரீநாத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க தொடங்கும்போதுதான தெரியவந்தது நாராயணசாமிக்கு கிட்னி செயல் இழந்துள்ளது என்று. இதனால் கோவை அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்ல இருக்கின்றனர். நாராயணசாமிக்கு உடல் மற்றும் மனரீதியான சிகிச்சைகள் தர வேண்டியுள்ளது.

     ராட்சச பிண்டங்கள்

    ராட்சச பிண்டங்கள்

    சொத்திற்காக இதனை செய்திருந்தாலும், லலிதாவும், ஸ்ரீநாத்தும் மனிதப் பிறவிகள்தானா? இவர்கள் உண்மையான கிறிஸ்தவ விசுவாசிகள்தானா? அனைத்தையுமே அன்பின் அஸ்திவாரத்திலேயே போதித்த சென்ற இயேசுவை பின்பற்றுபவர்களா இவர்கள்? தனக்கு துரோகம் இழைத்த பாவிகளையே இயேசு மன்னித்தவராயிற்றே. கிறிஸ்தவம் என்றில்லை, எல்லா மதமும் மனிதாபிமானம் மற்றும் அன்பைதான் போதிக்கின்றன. ஆனால் கட்டிய கணவனையும், பெத்த தகப்பனையும் இப்படி கோரமாய் சித்திரவதை செய்த இவர்கள் கிறிஸ்தவர்கள் மட்டுமில்லை... மனிதர்களாகவே இருக்க முடியாது... இருவருமே இந்த பூமியில் வாழ தகுதியற்ற ராட்சச பிண்டங்களே ஆவார்கள்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+