திருமங்கலம் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் பரவி விட்டது.. அன்புமணி
சென்னை: தமிழகம் முழுவதும் திருமங்கலம் கலாச்சாரம் பரவி விட்டது. இது இந்தியா முழுவதும் பரவினால் மிகப் பெரிய விளைவு ஏற்பட்டு விடும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அன்புமணி. அப்போது அவர் கூறியதாவது:
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு கடிதம் எழுத உள்ளேன். அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து, நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர வலியுறுத்த உள்ளேன். தமிழக சட்டசபை தேர்தல் நியாயமற்ற முறையில் நடந்தது. இந்த தேர்தல் ஒரு கேலி கூத்தாக இருந்தது.

பணத்தை வைத்தும், அதிகாரத்தை வைத்தும், தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லாத சூழ்நிலையை பயன்படுத்தியும் வெற்றி பெற்றுள்ளார்கள். இனிமேல் நடக்கும் தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். இந்த தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என கொடுத்தார்கள். அடுத்து நாடளுமன்றத் தேர்தலில் 4 ஆயிரம், 5 ஆயிரம் பணம் கொடுப்பார்கள்.
இது இந்தியாவில் பரவினால், பணம் வைத்துள்ளவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்திவிடும். திருமங்கலம் கலாச்சாரம் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டின் கலாச்சாரம் இந்தியா முழுவதும் பரவினால் மிகப்பெரிய விளைவு ஏற்படும்.
தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பணம் கொடுத்தது தேர்தலுக்கு பிறகு தெரிய வந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளை தகுதி நீக்கம் செய்வதுடன் அங்கீகாரத்தை ரத்து செய்யும் வகையி்ல் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications