கூட்டணி ஆட்சி கோட்பாடுக்காக தேர்தல் புறக்கணிப்புக்கும் தயார்: திருமாவளவன்
சென்னை: கூட்டணி ஆட்சிக்காக தேர்தலை புறக்கணிக்கவும் தயார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி" என்னும் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ம.தி.மு.க. பொருளாளர் மாசிலாமணி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டணி ஆட்சி பற்றி உரையாற்றினார்கள்.

திருமாவளவன் பேசியதாவது: ஏதோ ஒர் குறிப்பிட்ட அணிக்கு எதிராக இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இது வரலாற்று தேவை. இன்றைய தேர்தல் முறையில் விளிம்புநிலை சமூகம் அதிகாரம் பெற முடியாது. அவர்கள் அதிகாரம் பெறுவதற்கு கூட்டணி ஆட்சி என்கிற நிலை ஒரு சாதாரண உக்திதான்.
எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு துணிச்சலான முடிவை எடுப்பது அவசியமாகும். இங்குள்ள கட்சிகளுடன் தேர்தல் களத்திலும் இணைந்து நிற்க தயார் அதில் ஆட்சேபணை இல்லை. இது ஒரு கோட்பாடு. அதில் வெற்றி பெறும் முயற்சியில் தோல்விகள் கிடைக்கலாம். அதற்காக கலங்கி நின்றுவிட கூடாது. கூட்டணி ஆட்சியை வலியுறுத்தும் முயற்சிக்காக, வரும் பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாமல் ஒதுங்கவும் தயாராக உள்ளது என்றார்.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications