மீண்டும் களம் காணும் கேபிபி சாமி... திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
சென்னை: முன்னாள் அமைச்சர் கேபிபி சாமி மீண்டும் தேர்தல் களம் கண்டுள்ளார். அவருடன் சில புதியவர்களையும் திருவள்ளூர் மாவட்ட வேட்பாளர்கள் பட்டியலில் காண முடிகிறது.
அனுபவம் வாய்ந்தவர்கள் வரிசையில் முக்கியமானவராக ஆவடி தொகுதியில் போட்டியிடும் சா.மு. நாசர் இருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா.
கே.பரிமளம்
பொன்னேரி தனி தொகுதியில் போட்டியிடுகிறார் டாக்டர் கே.
பரிமளம் விஸ்வநாதன். 54 வயதாகும் இவரது கணவர் பெயர் டாக்டர் இ விஸ்வந்தான். இவர் பொன்னேரி நகர திமுக செயலாளராக இருக்கிறார். அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக இருந்தவர்.
இ.பரந்தாமன்
பூந்தமல்லி (தனி) தொகுதியில் போட்டியிடும் இ.
பரந்தாமன் 39 வயதானவர். வழக்கறிஞர். 2006 முதல் 2011 வரை சென்னை உயர்நீதிமன்ற அரசு உதவி வழக்கறிஞராக இருந்துள்ளார். தற்போது திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளராக உள்ளார்.
வி.ஜி.ராஜேந்திரன்
திருவள்ளூர் தொகுதியில்
ராஜேந்திரன் போட்டியிடுகிறார். கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள இவரது தந்தை வி.குருநாதன். கட்சியில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
சா.மு.நாசர்
ஆவடி தொகுதியில் போட்டியிடும் சா.மு.
நாசர், நீண்ட கால திமுக போராளி. தற்போது திருவள்ளூர் மாவட்ட செயலாளராக இருக்கிறார். திமுகவினர் மட்டுமல்லாமல் யார் கூப்பிட்டாலும் உதவிக்கு வருபவர் என்ற பெயர் இவருக்கு உண்டு.
கேபிபி சாமி
முன்னாள் அமைச்சரான
கேபிபி சாமி திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதியில் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் கூட சாமியையே மீண்டும் வேட்பாளராக்கியுள்ளது திமுக. காரணம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய தலையாக அவர் வலம் வருவதே. கனிமொழியின் ஆதரவாளர் இவர். 2011 தேர்தலில் வென்று அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாமி மீதும் அவரது தம்பி மீதும் கொலை வழக்குப் போடப்பட்டது. இதில் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருந்தவர் சாமி.
எஸ்.சுதர்சனம்
மாதவரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுபவர் எஸ்.
சுதர்சனம். இவர் சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications