திருவாரூர், திருப்பரங்குன்றம்.. தமிழக அரசியலை நிர்ணயிக்கும் 2 தொகுதிகள்.. நவம்பரில் இடைத்தேர்தலா?
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வரும் நவம்பரில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
சென்னை: திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வரும் நவம்பரில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
தமிழக சட்டசபையின் மொத்த பலம் 234 ஆகும். தற்போது அதிமுகவிற்கு 116 உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவிற்கு 88, காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 மற்றும் சுயேச்சை வேட்பாளருக்கு 1 என்றுள்ளது.
18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதி
அதிமுக எம்எல்ஏ டிகே போஸ் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதி மிகவும் முக்கியமான தொகுதியாகும். 8 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தொகுதி தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

திருவாரூர் தொகுதி
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என்று திமுக நினைத்துள்ளது.

தெலுங்கானாவுடன் தேர்தல்
இந்த நிலையில் வரும் நவம்பரில் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வரும் நவம்பரில் கலைக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதோடு சேர்த்து இந்த தேர்தலையும் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.

ஒப்புதல் வழங்கிவிட்டதா?
அதோடு இதுகுறித்த வரைவு அறிக்கை ஏற்கனவே தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. தமிழக அரசும் நவம்பர் மாதம் தேர்தலை நடத்த ஒப்புக்கொண்டு உள்ளதாக தகவல்கள் வருகிறது. இதனால் நவம்பரில் தமிழகம் மிக முக்கியமான திருப்பத்தை சந்திக்க உள்ளது என்று கூறலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications