சட்டசபைத் தேர்தலுக்கும் இப்பவே 'பேஸ்மென்ட்' போட்டாச்சு.. அன்புமணி சொல்கிறார்!
தர்மபுரி: தர்மபுரியில் நடந்த தேசிய ஜனநாயக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், சட்டசபைத் தேர்தலுக்கும் இதே கூட்டணி தொடரும் என்று பொடி வைத்துப் பேசியுள்ளார்.
இதன் மூலம் பாமக, தேமுதிக ஆகியவை இணைந்தே சட்டசபைத் தேர்தலையும் சந்திக்கும் என்ற புதிய செய்தியை திமுக, அதிமுகவுக்கு பாமக வெளிப்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

அன்புமணி பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி அமைவதை தடுக்க ஜெயலலிதா எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஆனால் முடியவில்லை. இந்த கூட்டணி அமைந்தது ஜெயலலிதாவிற்கு முதல் தோல்வி. அடுத்த தோல்வி ஏப்ரல் 24ஆம் தேதி காத்திருக்கிறது.
வெவ்வேறு கொள்கைகள் கொண்ட நீங்கள் எப்படி ஒற்றுமையோடு செயல்பட முடியும் என்று கேட்கிறார்கள். நூறு சதவீதம் கட்டாயமாக ஒற்றுமையுடன் செயல்படுவோம். திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து மக்கள் வெறுப்பில் உள்ளார்கள். அவர்கள் ஏக்கத்தை போக்கவே இந்த மாற்று அணியை உருவாக்கியிருக்கிறோம்.
இந்த கூட்டணியில் ஆரம்பத்தில் சில குழப்பங்கள் இருந்தது. அது இப்போது சரி செய்யப்பட்டு விட்டது. எங்கள் கூட்டணி அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்றார் அன்புமணி.
நிச்சயம் இது எச்சரிக்கை மணிதான்...












Click it and Unblock the Notifications