லாரி டிரைவரும் ஒரு கடவுள் என்பதை உணரும் தருணம் இதுதான் .. வீடியோவை பாருங்க
உதகை: காட்டு யானை ஒன்று லாரியை வழிமறித்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் யானையிடம் சிக்கும் நிலை இருந்தது. அப்போது காட்டு யானையிடம் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை தப்பிக்க வைக்க, லாரி ஓட்டுநர் உடனடியாக கதவை திறந்தார். சிலநொடிகளில் இருவரும் லாரிக்குள் ஏறினார்கள்.
இரண்டு வினாடிகள் தாமதம் ஆகி இருந்தாலும், அந்த இரண்டு பேரும் காட்டு யானையிடம் சிக்கி உயிரிழந்திருப்பார்கள். நல்ல வேளையாக கடவுளாக அந்த லாரி டிரைவர் , பைக்கில் வந்த இளைஞர்களை காப்பாற்றினார்.

கோடை காலங்களில் யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டுப்பகுதியில் இருந்து சாலையை நோக்கி சர்வ சாதாரணமாக வருகின்றன. எனவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கவனமாக இருக்க வேண்டும். கார், லாரி, பஸ் போன்ற வாகனங்கள் யானைகளிடம் இருந்து தப்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் இரு சக்கர வாகனத்தில் வருவோர் தப்பிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். நீலகிரி மாவட்டம் முதுமலை சாலை, உதகையில் இருந்து வயநாடு செல்லும் சாலைகளில் செல்வோர் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். இதேபோல் வால்பாறையில் இருந்து திருச்சூர் சாலை, தேனி மாவட்டம் மேகமலை செல்லும் சாலை, உடுமலைப்பேட்டை மூணாறு சாலை, போடி மெட்டு மூணாறு சாலை, பழனி வழியாக கொடைக்கானல் சாலை, திம்பம் சத்தியமங்கலம் சாலை போன்றவை யானைகள் நடமாட்டம் உள்ள சாலைகள் ஆகும்.
இந்த சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மாலை நேரத்திற்கு பிறகு செல்ல வேண்டாம். பகலில் சென்றால் பாதுகாப்பாக இருக்கும். இரவிலோ மாலையிலோ செல்லாதீர்கள். ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அது எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை.
மலைசாலையில் காட்டு யானை ஒன்று லாரியை வழிமறித்தது. லாரியை போகவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் யானையை பார்த்துவிட்டு லாரியின் இடது பக்கம் மறைந்தார்கள். இருப்பினும் யானை அவர்களை பார்த்துவிட்டது.
டிரைவரும் ஒரு கடவுள் என்பதை உணரும் pic.twitter.com/oWlmYUN91G
— Rajini (@rajini198080) June 8, 2023
இதை பார்த்த லாரி ஒட்டுநனர் அப்போது காட்டு யானையிடம் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை தப்பிக்க வைக்க உடனடியாக லாரியின் முன்பக்க கதவை திறந்தார். சிலநொடிகளில் இருவரும் லாரிக்குள் ஏறினார்கள். ஏறி முடிப்பதற்குள்ளாகவே யானையும் பக்கத்தில் வந்துவிட்டது. நல்லவேளையாக கதவை அடைத்துவிட்டார்கள்.
இரண்டு வினாடிகள் தாமதம் ஆகி இருந்தாலும், அந்த இரண்டு பேரும் காட்டு யானையிடம் சிக்கி உயிரிழந்திருப்பார்கள். நல்ல வேளையாக கடவுளாக அந்த லாரி டிரைவர் , பைக்கில் வந்த இளைஞர்களை காப்பாற்றினார். மனிதநேயம் மிக்க லாரி ஓட்டுநரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மக்கள் பலரும் கடவுளாக மாறி காப்பாற்றிய லாரி ஓட்டுநரை பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications