கோயிலில் சூடம் ஏற்றிய போது ஆடையில் தீப்பிடித்து 7 வயது சிறுமி பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கோயிலில் சூடம் ஏற்றும் போது எதிர்பாராதவிதமாக ஆடையில் தீப்பற்றி, படுகாயமடைந்த 7 வயது சிறுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே கண்ணங்கட்டை கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் விமலாதேவி (7), அங்குள்ள பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி அய்யப்பன் தனது குடும்பத்தினருடன் கன்னிதேவி கோயிலுக்கு சென்றிருந்தார். அங்கு விமலாதேவி சூடம் ஏற்றி வழிபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பற்றியது.
இதில், படுகாயமடைந்த விமலாதேவியை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி இன்று பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பசுவந்தனை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications