'மெர்சல' விட்டுவிட்டு போய் சென்சார் போர்டுக்கு எதிராக போராடுங்க.. பாஜக தலைவர்களுக்கு திருமா குட்டு!
மெர்சல் சென்சார் போர்டு போய் உரிய தணிக்கை செய்யப்பட்டுதான் வெளியே வந்துள்ளது. அப்படியானால், சென்சார் போர்டு என்கிற தணிக்கை துறைக்கு எதிராகத்தான் இவர்கள் போராட வேண்டும், படத்திற்கு எதிராக அல்ல என்றார்
சென்னை: தணிக்கைக்குழுவிற்கு எதிராகத்தான் போராடவேண்டுமே தவிர மெர்சல் படத்தை எதிர்க்கக்கூடாது என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோவையில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பு நீக்கம் போன்றவை குறித்த விமர்சன வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
நான் படத்தை பார்க்கவில்லை. ஆனால் படம் சென்சார் போர்டு போய் உரிய தணிக்கை செய்யப்பட்டுதான் வெளியே வந்துள்ளது. அப்படியானால், சென்சார் போர்டு என்கிற தணிக்கை துறைக்கு எதிராகத்தான் இவர்கள் போராட வேண்டும், படத்திற்கு எதிராக அல்ல என்றார் திருமாவளவன்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மத்திய மருத்துவக்குழுவின் தமிழக பயணம் ஒப்புக்காகவே அமைந்தது. அதனால் பயன் ஏதும் இல்லை. அரசுப்போக்குவரத்து கழக கட்டடங்களின் தன்மை பற்றி ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மற்றும் அரசு அலுவலக கட்டடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு ஆய்வு குழுவை அமைக்க வேண்டும். பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து பலியான ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications