டீச்சர் விட்டு டீச்சர் தாவிய ஆசிரியர்.. தட்டிக் கேட்டால் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டல்.. கைது
திருப்பூர்: ஆசிரியையுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வரும் ஆசிரியர் ஒருவர், இன்னொரு ஆசிரியையுடன் இன்னொரு கள்ளக்காதலில் ஈடுபட்டார். இதுகுறித்து ஆசிரியை தட்டிக் கேட்டபோது உனது ஆபாசப் படத்தை வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டினார். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்தவர் நாகஜோதி. அரசு ஆசிரியையாக இருக்கிறார். இவர் தற்போது திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையத்தில் வசிக்கிறார். இவர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:

நான் மதுரை மாவட்டம் டி. கள்ளிப்பட்டியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தேன். எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதே பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் காளீஸ்வரன். அவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் எனக்கும், காளீஸ்வரனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே கள்ளக்காதலாக மாறியது. குடும்பத்தை விட்டு பிரிந்து இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தோம். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இருந்து திருப்பூருக்கு இடம்மாறி வந்தோம். இங்கு வந்த நாங்கள் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தோம். காளீஸ்வரன் திருப்பூர் ராயபுரத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக உள்ளார். நான் வேறு பள்ளியில் வேலை செய்து வருகிறேன்.
இந்நிலையில் ஆசிரியர் காளீஸ்வரனின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அது குறித்து நான் கண்காணிக்க ஆரம்பித்தேன். அப்போது காளீஸ்வரனுக்கு இன்னொரு ஆசிரியையுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த நான் இது குறித்து காளீஸ்வரனிடம் தட்டிக் கேட்டேன்.
என்னை எதுவும் கேட்க கூடாது என்றும் நாம் உல்லாசமாக இருந்த போது செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளேன். ஏதாவது மிரட்டினால் இணைய தளத்தில் ஆபாச படங்களை வெளியிட்டு விடுவேன் என்று படத்தை காண்பித்து என்னை மிரட்டுகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி வழக்குப் பதிவு செய்து காளீஸ்வரனைக் கைது செய்து பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். காளீஸ்வரன் தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications