திருவள்ளுவர்தான் 'அம்மாவை' காப்பாத்தனும்: மயிலாப்பூர் அதிமுக எம்.எல்.ஏ ராஜலட்சுமி
சென்னை: வழக்குகளில் இருந்து அம்மா விடுபட்டால்தான் நமக்கு வாழ்வு. வழக்கில் இருந்து திருவள்ளுவர்தான் அம்மாவை விடுவிக்கவேண்டும் என்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ராஜலட்சுமி கூறியுள்ளார்.
திருவள்ளுவர் பிறந்த தினத்தையொட்டி, திருவள்ளுவர் அவதரித்த மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர், வாசுகி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் திருக்குறள் பாடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ராஜலட்சுமி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

அம்மா வழக்கு
திருவள்ளுவரைப் பற்றி பேசிய எம்.எல்.ஏ ராஜலட்சுமி, பின்னர் அம்மா புரணம் பற்றி பேசினார். அம்மாவிற்கு சொத்துக்கள் எதுவும் தேவையில்லை. மக்களுக்காகத்தான் அவர் வாழ்கிறார். வழக்குகளில் இருந்து அவர் விடுபட்டு வந்தால்தான் நமகெல்லாம் வாழ்வு. அவர் வழக்குகளில் இருந்து விடுபட திருவள்ளுவர் அருள்புரியவேண்டும் என்றார்.
அமைச்சர்கள் மரியாதை
திருவள்ளுவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தமிழ் வளர்ச்சிக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் சிலைக்கு கீழே உள்ள அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் சின்னையா, அப்துல் ரஹீம், ஆர்வி உதயகுமார், கேசி வீரமணி, வளர்மதி, பிவி ரமணா, ராஜேந்திர பாலாஜி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பள்ளிக்குழந்தைகள் திருக்குறளின் சில அதிகாரங்களை பாடி திருவள்ளுவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications