தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி: முதல்வருக்கு தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்கம் கோரிக்கை!
சென்னை: தமிழகத்தில் அரசு தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை மீண்டும் நடத்த வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் முதல்வர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
ஓவியம், தையல், இசை பயிற்சி பெற விரும்பும் நபர்களுக்காக அரசு சார்பில் தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி மூன்று மாதங்கள் அளிக்கப்பட்டது.
ஆனால் பல்வேறு காரணங்களால் இப்பயிற்சி கடந்த 1994ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பின்பு கடந்த 2002ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், தொடர்ச்சியாக பயிற்சி வகுப்பை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் மீண்டும் கடந்த 2007ம் ஆண்டு இப்பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டது.
ஆனால் பயிற்சி வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஆண்டு வரை தமிழகம் முழுவதும் அரசு தொழில்நுட்பத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 55 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று பயிற்சிக்காக காத்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு அரசு தொழில்நுட்பத் தேர்வும் நடைபெறவில்லை. இது கலைத் தொழிலில் உள்ள அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே, அரசு தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு மீண்டும் நடத்த வேண்டும். மேலும், அரசு தொழில்நுட்பத் தேர்வையும் நடத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications