சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு.. எப்போது அமைச்சரவை மாற்றம்? பீதியில் தமிழக அமைச்சர்கள்!!
சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்களால் மூத்த அமைச்சர்கள் பீதியில் இருக்கின்றனர்.
தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு அமைந்த கடந்த மூன்றரை ஆண்டுகளில் 16 முறை அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த மே மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.

கடைசி அமைச்சரவை மாற்றம்
அப்போது வி.ரமணா, கே.டி.பச்சைமால், எஸ்.தாமோதரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். அத்துடன் மேலும் 3 அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன.

மீண்டும் மாற்றம்?
இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போதிருந்தே சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் நிச்சயம் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

சட்டசபை தேர்தலை முன்வைத்து..
2016 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசியல் கட்சிகள் தீவிர வியூகம் வகுத்து அடிப்படை களப் பணிகளை தொடங்கியுள்ளன. இதனால் சில மூத்த அமைச்சர்கள் நீக்கப்பட்டு கட்சிப் பணிக்கு அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.

விஜயபாஸ்கர் நீக்கம்?
அண்மையில் செய்தியாளர்களுடன் மோதிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நீக்கப்படலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த நேரத்திலும் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்பதால் அமைச்சர்கள் சிலர் பீதியில் இருக்கின்றனர்.

கே.ஏ. செங்கோட்டையன்?
அதே நேரத்தில் நீண்டகாலமாக அதிமுகவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் அமைச்சராக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில புதுமுகங்களுக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் அதிமுக நிர்வாகிகள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications