சொத்துக் குவிப்பு வழக்கு: நல்ல தீர்ப்பு வரும் என்கிறார் கருணாநிதி!

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியுள்ளதாவது:
''முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய சென்னையில் உள்ள அசையும் சொத்துக்களை, வழக்கு விசாரணை நடந்து வரும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு வரும் 21 ஆம் தேதிக்குள் கொண்டு வர வேண்டுமென்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இந்த வழக்கு 6-12-2013 அன்று நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் தாமரைச்செல்வன், ''குற்றவியல் நடைமுறை சட்டங்களின்படி நகைகளை பெங்களூரு நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதே சரியாக இருக்கும்" என்றார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், ''வழக்கில் தொடர்புடைய அசையும் சொத்துக்களை சென்னையிலிருந்து கொண்டு வரத் தேவையில்லை" என்று வாதாடினார்.
நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பில், ''இந்த வழக்குப் பொருள்கள், எந்த நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறதோ, அங்கேதான் இருக்க வேண்டும். முதலில் சென்னை நீதிமன்றம், வழக்குப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வழக்கினை நடத்திக்கொண்டிருந்தபோதுதான், வழக்கு இந்த நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை இந்த நீதிமன்றத்துக்கு மாற்றிய சென்னை நீதிமன்றம், இந்தப்பொருள்களை மாற்றியதற்கான எந்தவிதமான ஆதாரமும் தற்போது இல்லை.
இந்த வழக்குக்கான சொத்துக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வழக்கை நடத்துவதுதான் சட்டப்படியான முறையாகும். ஆகவே, இந்த வழக்குக்கான சொத்துக்களை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து இந்த நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். இந்தப் பொருள்களைப் பற்றி தொலைக்காட்சிகளிலோ, நாளிதழ்களிலோ செய்திகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தனி நீதிபதி விளக்கமாகத் தெரிவித்து விட்டார்.
இந்த பிரச்சினையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் நீதிபதிக்கு கொடுத்த மனுவில், ''தி.மு.க. வழக்கறிஞர்களின் கோரிக்கை நியாயமானது" என்று தெரிவித்திருக்கிறார். இதுவே இந்த வழக்கில் முழுமையான தீர்ப்பல்ல.
என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கக் கூடிய சட்ட நீதி தோய்ந்த இந்த வார்த்தைகளையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்கக் கூடுமென்றுதான் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் குறிப்பிட்ட நீதிபதிதான் அந்த வழக்கினைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்று
வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு, புதிய நீதிபதி ஒருவர் அங்கே விசாரணையை மேற்கொண்டு, நேற்றையதினம் ஒரு முடிவினை வழங்கியிருக்கிறார்.
இதுவே இந்த வழக்கில் முழுமையான தீர்ப்பல்ல. நீதிபதி பாலகிருஷ்ணாதான் இந்த வழக்கினைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் கோரிக்கை வைத்து, அது நிறைவேறாமல் போனபோதே சட்டம் தன் கடமையைச் சிறப்பாகச் செய்கிறது என்றுதான் கருதப்பட்டது. அதே வரிசையில் முழுமையான நிறைவான தீர்ப்பு உரிய நேரத்தில் வரும் என்றே தமிழ்நாடு எதிர்பார்க்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications