செம்பரம்பாக்கம் ஏரி திறப்பதில் நிர்வாக கோளாறு எதுவும் இல்லை: அவதூறு பரப்புகிறார்கள்- கே.ஞானதேசிகன்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீரைத் திறந்துவிடுவதற்காக பொறியாளர்கள் பொதுப்பணித் துறைச் செயலாளரிடமிருந்தும், தலைமைச் செயலாளரிடமிருந்தும் உத்தரவை எதிர்பார்த்து இருந்ததாகவும், அவர்கள் முதல்வரின் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் கூறப்படுவது உண்மையல்ல. இவை எந்தவொரு அடிப்படையும் இல்லாத அவதூறு பரப்பும் வதந்திகள் மட்டுமே என்று என தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதற்கு அரிதான இயற்கைப் பேரிடர்தான் காரணம்; செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறந்துவிடுவதில் ஏற்பட்ட நிர்வாகக் கோளாறு காரணமல்ல எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதற்கு செம்பரம்பாக்கம் ஏரியில் நீரைச் சரியாக திறந்துவிடாததே காரணம் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, உண்மையை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. அதிலிருந்து அதிகபட்சமாக 33 ஆயிரத்து 60 கன அடி நீரைத் திறந்துவிடலாம். நவம்பர் 30-ஆம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.05 அடியாக இருந்தது. வெள்ளக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2 அடி குறைவாக அதாவது 22.05 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது.

50 செ.மீ மழை
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மிக அதிக பலத்த மழை பெய்யும் என்றுதான் வானிலை அறிவிப்பு வெளியிட்டதே தவிர 50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என அறிவிக்கவில்லை. நாசா அமைப்பு, 50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையல்ல. மழைப் பொழிவைக் கணிக்கும் வேலையை தாங்கள் மேற்கொள்வதில்லை என நாசா அமைப்பே இதுகுறித்து தெளிவுப்படுத்தியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி
மிக பலத்த மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு டிசம்பர் 1ம் தேதி நண்பகல் முதல் மிக அதிகமான நீர்வரத்து இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் உதவி ஆணையர்தான் கட்டுப்பாட்டு அதிகாரி ஆவார். பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல நீராதார நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்.

தலைமைச் செயலரின் உத்தரவு
பொறியாளர்கள் ஏரிக்கான நீர்வரத்தையும், மழைப்பொழிவையும் தொடர்ந்து கண்காணித்து, செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பைக் கருதி நீரைத் திறந்துவிட்டனர். டிசம்பர் 1ம் தேதி வரை, உபரி நீரைத் திறந்து விடுவதற்காக பொதுப்பணித் துறையின் செயலர் உத்தரவோ, தலைமைச் செயலாளரின் உத்தரவோ தேவைப்படவில்லை, கோரப்படவும் இல்லை.

பொறியாளர்கள் கண்காணிப்பு
களத்தில் இருந்த பொறியாளர்களே நிலைமைக்கு ஏற்ப திறந்துவிடப்படும் நீரைத் தொடர்ந்து அதிகரித்து வந்தனர். இதற்கு நீரைத் திறந்துவிட்டது தொடர்பான புள்ளிவிவரங்கள் ஆதாரங்களாக உள்ளன. செம்பரம்பாக்கம் மட்டுமின்றி, பூண்டி, செங்குன்றம், சோழவரம் ஏரிகளிலும் நீரைத் திறந்துவிடுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே முடிவுகளை எடுத்தனர்.

அதிகாரிகள் காத்திருக்கவில்லை
நீரைத் திறந்துவிடுவதற்காக பொறியாளர்கள் பொதுப்பணித் துறைச் செயலாளரிடமிருந்தும், தலைமைச் செயலாளரிடமிருந்தும் உத்தரவை எதிர்பார்த்து இருந்ததாகவும், அவர்கள் முதல்வரின் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் கூறப்படுவது உண்மையல்ல. இவை எந்தவொரு அடிப்படையும் இல்லாத அவதூறு பரப்பும் வதந்திகள் மட்டுமே.

மக்கள் வெளியேற்றப்பட்டனர்
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீரைத் திறந்துவிடுவது தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள், சென்னைப் பெருநகர போலீஸ் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆகியோருக்கும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டது. இந்த வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தனியார் தொலைக்காட்சிகளிலும், மாலைப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது.
அதேபோல், வருவாய் அதிகாரிகளும், தீயணைப்பு அதிகாரிகளும் வீதி, வீதியாக மக்களுக்கு எச்சரிக்கை விடுவிடுத்தனர்.

முன்னெச்சரிக்கை விடப்பட்டது
மேலும் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான்பேட்டை பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் 17,300 பேரை வெளியேற்றினார். எனவே, போதுமான முன்னெச்சரிக்கை விடுவிக்கவில்லை என்பதும் உண்மையல்ல.

ஏரி நிரம்பி வழியவில்லை
பலத்த மழை அறிவிப்பு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 1ம் தேதி மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு, உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார்.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்ததாகக் கூறப்படுவதும் உண்மையல்ல.

அதிக மழை
மொத்த நீரும் மதகுகள் வழியேதான் வெளியேற்றப்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை முன்கூட்டியே திறந்திருந்தால் அதிக நீரை வெளியேற்றாமல் தவிர்த்திருக்கலாம் என சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு டிசம்பர் 1ம் தேதியிலிருந்து 24 மணி நேரத்தில் 2.13 டி.எம்.சி. நீர்வரத்து இருந்தது. இது ஏரியின் கொள்ளளவில் 60 சதவீதம் ஆகும். எனவே, நீர்மட்டத்தைக் குறைத்திருந்தால் கூட வெள்ளப் பாதிப்பில் வித்தியாசம் இருந்திருக்காது.

ஏரிகளில் நிரம்பிய நீர்
அடையாறு ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் செம்பரம்பாக்கம் 44 சதவீதம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆதனூர் ஏரி, மணிமங்கலம் ஏரியிலிருந்தும் அடையாறுக்கு நீர் செல்கிறது. தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் 47 சென்டிமீட்டர் அளவுக்கு கனமழை பொழிந்ததால், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வண்டலூர், ஊரப்பாக்கம், நந்திவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகளவு நீர் அடையாற்றில் பெருக்கெடுத்தது. நந்திவரம், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், ஆதனூர் ஏரிகள் அதிகளவு நீர்வரத்து காரணமாக உடைந்து வெள்ளம் ஏற்பட்டது.

பலத்த மழை
பல்வேறு காரணங்களால் இந்த மழை ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் பி.முகோபாத்யாய தெரிவித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் ஒன்றிணைந்ததால் பலத்த மழை பெய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

100 ஆண்டுகளில் இல்லாத மழை
100 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக மழையின் காரணமாகவே இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் மிக அரிய இயற்கைப் பேரிடர்தானே தவிர, ஏரியில் நீர் திறந்துவிடுவதில் ஏற்பட்ட நிர்வாகக் கோளாறல்ல. அடையாற்றின் முகப்பில் தூர்வாரியுள்ளதால்தான் மிக அதிகளவு நீர் அடையாற்றில் வெளியேறியது. இல்லையென்றால், மேலும் மிகப்பெரிய அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications