காவிரி விவகாரம்: அனைத்துக்கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லி பயணம்.. அம்மா நாளிதழில் செய்தி!
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாக அம்மா நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாக அம்மா நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் காவிரி விவகாரத்தில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கான நீரை 177.25 டிஎம்சியாக குறைத்தது. இது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி பயணம்
இதுதொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லி செல்லவுள்ளனர்.

நமது அம்மா நாளிதழில் செய்தி
தமிழக அரசு சார்பில் பிரதமரை சந்திக்க அடுத்த வாரம் நேரம் கேட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 வாரம் மட்டுமே உள்ள நிலையில் அடுத்த வாரம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த உள்ளனர்.

நேரில் வலியுறுத்த திட்டம்
தமிழக அரசு சார்பில் பிரதமரை சந்திக்க அடுத்த வாரம் நேரம் கேட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 வாரம் மட்டுமே உள்ள நிலையில் அடுத்த வாரம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த உள்ளனர்.

சித்தராமையாவுக்கு முன்
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு முன் பிரதமரை சந்திக்க வேண்டும் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மும்முரமாக செய்து வருவதாகவும் அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications