கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி கேரள இளைஞர்களிடம் மோசடி... !
கரூர்: கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி கேரளா இளைஞர்களை ஏமாற்றிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் எஸ்.பி யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இன்று பல்வேறு தரப்பட்ட மனுக்கள் புகார்களாக வந்தன. இதில் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி கேரளா, தமிழக இளைஞர்களை ஏமாற்றி ரூ பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரளா இளைஞர்கள் கரூர் எஸ்.பி யிடம் மனு அளித்தனர்.

கரூர் புறவழிச்சாலையில் அசோக் நகரில் பிரைமா பிலேஸ்மேண்ட் இந்திய பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தமிழகத்திலும், கேரளாவிலும் உள்ள முன்னணி பத்திரிக்கைகளான கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர். இவற்றை உண்மை என நம்பிய தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்த மக்கள் ஏராளமானோர் தங்கள்து வேலைக்கு பதிந்தனர்.
இளைஞர்கள் தச்சு வேலை, எலெக்ட்ரீசியன், என்ஜினியர் உள்ளிட்ட வேலைக்கு விண்ணப்பித்தனர். இதனையடுத்து பதிவுக்கட்டணம், பயிற்சிக் கட்டணம், ஆங்கில பேச்சு பயிற்சி என பயிற்சிகளுக்கு சுமார் ரூ 65 ஆயிரத்தை 3 தவணைகளாக சுமார் 450 இளைஞர்களிடம் பெற்றிக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த இளைஞர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீது, வேலைக்கான கடிதம் உள்ளிட்டவைகளை அனுப்பி வைத்தனர். ஆனால் கடந்த 1 மாத காலமாக அதன் உரிமையாளர்களான பிரசாத் மற்றும் பிரபாகரன் ஆகியோரை தொடர்பு கொண்டும் பதில் கிடைக்காததால் அவர்களது அலுவலகத்தை பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வந்து பார்த்த போது அந்த நிறுவனம் பூட்டியிருந்தது.

இச்செய்தி நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானவுடன் பாதிக்கப்பட்ட தமிழக இளைஞர்கள் கரூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இன்று காலை கேரளா மாநிலத்தை சார்ந்த ஆலப்புலா மாவட்டத்தை சேர்ந்தவர்களான உன்னிகிருஷ்ணன் மற்றும் பலர் கரூர் எஸ்.பி யிடம் மனு கொடுத்தனர்.
கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி நூதனமுறையில் கேரளா, தமிழக இளைஞர்களை ஏமாற்றிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications