15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து உயர்வு - தமிழக அரசு உத்தரவு!
சென்னை: தமிழக அரசின் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலராக அந்தஸ்து உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தமிழக அரசின் செய்திக் குறிப்பு:
1983-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான,
அம்புஜ் சர்மா (மத்திய அரசின் கனரக தொழில் கூடுதல் செயலாளர்)
பிரிஜ் கிஷோர் பிரசாத் (மத்திய உள்துறை கூடுதல் செயலாளர்)
தமிழக பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.எஸ்.பழனியப்பன்
1984-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான,
ஆர்.ராஜகோபால் (மத்திய உள்துறை ஆலோசகர்,
டி.ஜேக்கப் (மத்திய பணியாளர் பயிற்சித் துறை கூடுதல் செயலாளர்)
வி.கே.ஜெயக்கொடி (தமிழ்நாடு மின் நிதிக் கழக கூடுதல் தலைமைச் செயலாளர்)
தமிழக ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மீனாட்சி ராஜகோபால்
ஸ்மிதா நாகராஜ் (மத்திய பாதுகாப்புத் துறை டைரக்டர் ஜெனரல்)
ருல்கும்லியென் புரில் (மத்திய உள்துறை கூடுதல் செயலாளர்)
1985-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான
தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்
நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் சி.சந்திரமவுலி
முதல்-அமைச்சர் செயலக கூடுதல் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன் ராவ்
சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜக்மோகன் சிங் ராஜு
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கமிஷனரான கூடுதல் தலைமைச் செயலாளர் மோகன் பியாரே ஆகியோர் தலைமைச் செயலர் அந்தஸ்து உயர்வு பெறுகின்றனர்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications