தமிழக அரசு ஊழியர்கள் ஏப்.25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தமிழக அரசு ஊழியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம்: தமிழக அரசு ஊழியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பரசு நாகையில் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் 10,61,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கரை ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாகும். இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வேலைநிறுத்தத் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல நாட்கள் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சற்றே சமாதானமடைந்த அரசு ஊழியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். எனினும் தங்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பரசு நாகையில் அறிவித்துள்ளார். ஊதியக்குழு அமைப்பது, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications