நாளை காலை பிளஸ் டூ ரிசல்ட்... பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு- வீடியோ

நாளை காலை பத்து மணிக்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மறுகூட்டலுக்கு மே15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும், காலை 10 மனியிலிருந்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 Tomorrow +2 exam result in Tamilnadu

இந்த ஆண்டு, 9.3 லட்சம் மாணவ, மாணவியர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வெற்றி பெறுவார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.

நாளை காலை 10 மணிக்கு, தேர்வு முடிவுகள் வெளியாகுமென்றும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளம் மூலமாக பார்த்து தெரிந்துகொள்ளலாம். அல்லது தேர்வு எண், பெயர்,பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பித் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் தேர்வுத்தாள் மதிப்பெண் மறுகூட்டல் மே மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூன் மாதத்தில் துணைத் தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+