மெரினா நினைவிட விவகாரம்: நீதிபதிகளை கோபப்படுத்திய டிராபிக் ராமசாமி.. ஹைகோர்ட்டில் பரபரப்பு
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ் மற்றும் எஸ்எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

டிராபிக் ராமசாமி
அப்போது மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். டிராபிக் ராமசாமியும் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார்.

குழப்பிய டிராபிக் ராமசாமி
பின்னர் கருணாநிதி தொடர்பான வழக்கில் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கை முடித்து வைக்கக்கூடாது என அவர் கூறினார்.

நீதிபதிகள் கோபம்
முன்னர் வாபஸ் பெறுவதாக கூறிவிட்டு பின்னர் தனது நிலைப்பாட்டை டிராபிக் ராமசாமி தரப்பு மாற்றிக்கொண்டதால் நீதிபதிகள் கோபம் அடைந்தனர்.

எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்
மேலும் மெரினாவில் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்றும் டிராபிக் ராமசாமி கூறினார். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக டிராபிக் ராமசாமி தரப்பு கூறியது.

வழக்குகள் தள்ளுபடி
இதைத்தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கான 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications