தாம்பரத்துல ஆச்சரியம்.. "செங்கோட்டை டூ தாம்பரம்" ரெயில்.. ஸ்பெஷல் அறிவிப்பு.. 1-ம் தேதியே அமலாகிறது
சென்னை: தாமிரபரணி எக்ஸ்பிரஸ் குறித்து ஒரு முக்கிய தகவலை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.. இதைக்கேள்விப்பட்டு, ரயில்வே பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கோட்டை - தாம்பரம் புதிய வாராந்திர அதிவேக ரயில் சேவையை கடந்த மாதம் பிரதமர் மோடி சென்னையில் சமீபத்தில் துவங்கி வைத்தார். இந்த ரயில் (20684 ) கடந்த மாதம் 17ம் தேதி முதல் செங்கோட்டையிலிருந்து முதல் சேவையை தொடங்கியது.
செங்கோட்டையிலிருந்து மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு தென்காசி பாவூர்சத்திரம், அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்திற்கு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்றடையும்.
புதிய கோரிக்கை:
இந்த ரயில் குறித்து அறிவிப்பு வெளியாகும்போது ஏப்ரல் மே மாதங்களில் வாரம் ஒரு முறையும், ஜூன் மாதம் முதல் வாரம் 3 முறை ரயிலாகவும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஜூன் மாதம் முதல் இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து வாரம் மும்முறை இயக்கப்படவும் உள்ளது.

இதனிடையே, தாமிரபரணி எக்ஸ்பிரஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்துக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பல வருடங்களாகவே, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேரடி ரெயில் இல்லையே பயணிகள் கவலையை தெரிவித்தபடியே இருந்தனர்..
வாரம் 3 முறை:
இவர்களின் குறையை போக்குவதற்காகவே, இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.. இதனால், பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுடன், மிகுந்த வரவேற்பையும் தந்து வருகிறார்கள்..
அதேபோல, இந்த ரெயிலை வாரத்திற்கு 3 முறை இயக்க வேண்டும் என்றும் ரெயில் பயணிகள் சங்கத்தினர், ரெயில் ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கையை விடுத்து வந்தனர்.. இந்த கோரிக்கையும் தென்னக ரயில்வே நிறைவேற்ற போகிறதாம். அதுகுறித்த ஒரு முக்கிய அறிவிப்பினையும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது..
அந்த அறிக்கையில், "ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்களிலும் வண்டி எண். 20683 சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டைக்கு வந்தடையும்.. மறு மார்க்கமாக வண்டி எண். 20684 செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும்.
ஹேப்பி நியூஸ்:
இந்த ரெயில்கள் விழுப்புரம், திருப்பாதிரி புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 2 இரண்டடுக்கு ஏசி பெட்டிகள், 5 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இணைக்கப்படுகிறது" என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications