தென் மாவட்ட ரயில்களில் விழுப்புரம் வரை பாதுகாப்புக்காக செல்லும் சென்னை ரயில்வே போலீஸ்
சென்னை: எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் ரயில்வே போலீசார் விழுப்புரம் வரை பாதுகாப்புக்காக இன்று முதல் செல்கின்றனர்.

கடந்த 1ம் தேதி சென்னை சென்டரலில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸில் 2 குண்டுகள் வெடித்ததை அடுத்து ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் ரயில்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகிறது. இதுவரை எழும்பூர் ரயில்வே போலீசார் இரவு நேரத்தில் செங்கல்பட்டு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு அவர்கள் விழுப்புரம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரயில்களில் பாதுகாப்பு செல்லும் போலீசார் முறையாக செயல்படுகிறார்களா, ஒழுங்காக சோதனை நடத்துகிறார்களா என்பது உள்ளிட்டவைகளை கண்காணிக்க 6 பேர் கொண்ட தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே போலீசார் பயணிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை ஆய்வு செய்ய இன்று முதல் விழுப்புரம் வரை ரயிலில் செல்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications