ஜாமினில் வெளியே வருகிறாரா தினகரன்.. வந்தா என்னாகும்?
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஜாமினில் வெளிவந்தால் அரசியலில் மேலும் உத்வேகத்துடன் செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
சென்னை: இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் சிறையில் உள்ள அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஜாமின் மனு மீது நாளை டெல்லி நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்குகிறது.
தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் சூழ்நிலையில், டெல்லி திகார் சிறையிலிருந்து தினகரன் வெளியே வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கிறார்கள் அதிமுகவினர். ஆனால், அவரின் அடுத்த நகர்வுகள் என்ன என்பதை அதிமுகவினர் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கிறது
கடந்த மாதம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட தினகரனுக்கு திகார் சிறைவாழ்வு பல புதிய விஷயங்களை கற்றுத்தந்துள்ளதாகவும், அவற்றை அரசியல் ஞானத்துடன் அவர் அமல்படுத்தவுள்ளார் என்றும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் சிலாகிக்கின்றனர்.

டெல்லி திட்டம்
ஜாமீனில் வெளிவந்தவுடன் டிடிவி தினகரன் நில நாட்கள் டெல்லியிலேயே தங்கி இருப்பார் என்று சொல்லப்படுகிறது. முக்கியத் தலைவர்கள் சிலரை சந்தித்து தமிழக அரசியலில் தன்னுடைய நிலைப்பாட்டை ஸ்திரப்படுத்ததே இந்த சந்திப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளதாம்.

ரஜினியுடன் சந்திப்பு
சென்னை திரும்பியவுடன், நடிகர் ரஜினியை சந்தித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று முகம் தூக்கிவைத்து பேசுகிறார்கள் அவரது முகாமைச் சார்ந்தவர்கள். அந்த அளவுக்கு வேகம் பெற்றுள்ளார் சிறைக்குள் என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

கூடும் கூட்டணி
அணிகளை இணைக்கவேண்டும் என்ற முயற்சி இரண்டுவாரங்களில் முடிந்துவிடும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அது தினகரனின் சிறையிலிருந்து வெளியே வருவதை முன்வைத்து தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

தீவிர அரசியல்
அதேபோல், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை நேரில் சென்று தினகரன் சந்தித்த பிறகு அணிகள் இணைப்பு வேகமெடுக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. ஆக, சிறையிலிருந்து வெளியேவரும் தினகரன் , கட்சி பணியிலிருந்து தள்ளி நின்று பல காரியங்களை செய்யவேண்டும். அதேபோல், பஜக அடுத்தகட்ட வியூகங்களை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் காய் நகர்த்தலை செய்யத்திட்டமிட்டுள்ளார் என்றும் பேசப்படுகிறது.

வியூகம்
எந்த நேரத்திலும், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகக்கூடிய சூழலில் இரட்டை இலை சின்னத்தின் தேவையை தினகரன் உணர்ந்திருக்கிறார். ஆனால், சின்னத்தை பெறும் முயற்சியால் சிறைக்குச் சென்றார் என்பதை தாண்டி, சின்னத்தை பெற அணிகளை இணைப்பையே உறுதியான ஒன்று இப்போது கருதியதாலேயே கட்சியில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார் தினரகன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications