18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்... சபாநாயகரின் ஆணையை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு
18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலின் உத்தரவை ரத்து செய்யக்கோரி டிடிவி தினகரன் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி செய்துள்ளார். இதனை எதிர்த்து தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளது.
பதவியை நீக்க சபாநாயகர் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சபாநாயகர் தனபாலின் உத்தரவு சட்டவிரோதம் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர் முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் வாபஸ் பெற்றனர்.

ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள்
அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில் 19 பேருக்கும் விளக்கம் கேட்டு பேரவைத்தலைவர் பி.தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதில், கம்பம் தொகுதி எம்எல்ஏ எஸ்டிகே ஜக்கையன் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு அளித்தார். சபாநாயகர் தனபாலிடம் விளக்கமும் அளித்தார். மற்ற 18 பேரும் குடகில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
Recommended Video


18 பேர் தகுதி நீக்கம்
18 பேரும் ஆஜராகி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் அளித்த கெடு முடிந்தும் எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்காத காரணத்தினால் 18 எம்எல்ஏக்களை இன்று தகுதி நீக்கம் செய்துள்ளார் சபாநாயகர் தனபால்.
|
18 எம்எல்ஏக்கள்
சபாநாயகர் தனபாலின் ஆணைப்படி, பூந்தமல்லி தொகுதி டி.ஏ.ஏழுமலை பெரம்பூர் தொகுதி பி.வெற்றிவேல் திருப்போரூர் மு.கோதண்டபாணி, சோளிங்கர் என்.ஜி.பார்த்திபன், குடியாத்தம் தொகுதி சி.ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் தொகுதி ஆர்.பாலசுப்பிரமணி, பாப்பிரெட்டி பட்டி பெ.பழனியப்பன், அரூர் ஆர்.முருகன், நிலக்கோட்டை ஆர்.தங்கதுரை, அரவக்குறிச்சி வி.செந்தில்பாலாஜி, தஞ்சாவூர் எம்.ரெங்கசாமி,மானாமதுரை சோ.மாரியப்பன் கென்னடி, ஆண்டிபட்டி தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் கா.கதிர்காமு, சாத்தூர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், பரமக்குடி எஸ்.முத்தையா, விளாத்திக்குளம் கு.உமா மகேஸ்வரி, ஒட்டப்பிடாரம் ஆர்.சுந்தர்ராஜ் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றிவேல் கொதிப்பு
இதனிடையே சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று வெற்றிவேல் எம்எல்ஏ கூறினார். நாங்கள் சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம் என்றும் கொறாடா உத்தரவு எல்லா இடத்திற்கும் பொருந்தாது என்றார்.

தினகரன் பேட்டி
அதே போல குறுக்கு வழியில் பெரும்பான்மையை காட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சபாநாயகர் தனபால் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதன்படி டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பதவியை நீக்க சபாநாயகர் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சபாநாயகர் தனபாலின் உத்தரவு சட்டவிரோதம் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை? அவசர முறையீட்டில் ஐகோர்ட் தலைமை நீதிபதி கேட்ட கேள்வி! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?











Click it and Unblock the Notifications