தூத்துக்குடியில் திமிங்கலங்கள் கரை ஒதுங்க இந்தோனேசிய நிலநடுக்கம் காரணமா?
சென்னை: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், மணப்பாடு, ஆலந்தலை ஆகிய கடற்கரைப் பகுதிகளில் இன்று 100க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின.
அவற்றில் 30க்கும் மேற்பட்ட சிறிய திமிங்கிலங்கள் உயிரிழந்த நிலையில் அவை கரை ஒதுங்கியதற்கான காரணத்தை மீன்வளத் துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
எனினும், திமிங்கிலங்கள் இன்று கரை ஒதுங்கியதற்கு யூகத்தின் அடிப்படையிலான சில காரணங்களும் தொக்கி நிற்கின்றன. பொதுவாகவே திமிங்கிலங்களுக்கு ஒலியைக் கிரகிக்கும் "எக்கோ லொக்கேஷன்" என்னும் தன்மை உண்டு.

அடி ஆழத்தில் வசிக்கும்
மேலும், அவற்றால் சிறு அதிர்வையும் உணர முடியும். இவை பெரும்பாலும் கடலின் அதிக ஆழத்தில் தரைப்பகுதிக்கு அருகிலேயே வசிக்கும்.

நிலநடுக்கம் காரணமா?
அதற்கு ஏற்றாற்போல இன்று இந்தோனேஷிய கடற்பகுதியில் 6.9 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு வேளை அதன் உட்சபட்ச அதிர்வுகளால் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி இருக்க வாய்ப்புண்டு.

கூட்டாக இடப்பெயர்ச்சி
எனினும், அடிக்கடி நிலநடுக்கம் வரும்போதெல்லாம் இப்படி கரை ஒதுங்காமல் இந்த முறை ஒதுங்கியதற்கு என்ன காரணம் என்று கேட்டால் பொதுவாக அடி ஆழத்தில் வசிக்கும் திமிங்கிலங்கள் குளிர் காலத்தில் மட்டுமே கூட்டமாக இடப்பெயர்ச்சியினை மேற்கொள்ளும். அப்படி இந்த முறை இடம் பெயர்ந்தபோது அதிகமான அதிர்வால் கரை ஒதுங்கியிருக்க சாத்தியக் கூறுகள் உண்டு.

நுரையீரலும் உண்டு
அடுத்ததாக கூட்டம், கூட்டமாகவே இடம் பெயரும் இவை கழிவுகள் இருக்கும் இடத்தில் வசிப்பது கடினம். ஏனெனில், வெப்ப ரத்தப் பிராணிகளான இவை நுரையீரல் கொண்டவை. கழிவுகள் இருக்கும் இடத்தில் இவற்றால் சுவாசிக்க இயலாது.

கூட்டாக தற்கொலை
மூன்றாவதாக திமிங்கிலங்களுக்கு மனிதனைப் போலவே தற்கொலை செய்து கொள்ளும் குணமும் உண்டு. இவை குடும்பமாகவே, கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்ளும். அதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications