வடகாட்டில் 4-வது நாளாகப் போராட்டம்... கோலாட்டம் ஆடி எதிர்ப்பு!
வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நான்காவது நாளாகப் போராட்டம் நடந்து வருகிறது. அதில் கலைஞர்கள் போரட்டப் பாடல்களுக்கு கோலாட்டம் ஆடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடகாட்டில் கலைஞர்கள் கோலாட்டம் ஆடி, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக 21 ஆவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நெடுவாசலுக்கு அருகேயுள்ள வடகாடு என்னும் ஊரிலும் போராட்டம் நான்காவது நாளாக இன்று நடைபெறுகிறது.

இந்தப் போராட்டத்தில், கலைஞர்கள் கோலாட்டம் ஆடி, ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் தீமைகளை குறித்து பாடல்களைப் பாடினார்கள்.
அந்த பாடல்களுக்கு ஏற்ப கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். கலையின் எந்த வடிவமும் மக்களுக்கானது என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து, வடகாட்டுப் போராட்டம் வரை கலைஞர்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications